பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 அறிவியல் பயிற்றும் முறை படக்காட்சிகள் மக்களுக்கு மகிழ்வூட்டி வருகின்றன. பல நவீன கண்டு பிடிப்புகளால் மருத்துவத் துறையிலும் அறுவை சிகிச்சைத் துறையிலும் விபத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நோய் களின் கொடுமையால் தவித்து வந்த மக்களின் துன்பமும் துயரமும் குறைந்துகொண்டு வருகின்றன. சுருங்கக் கூறின், ஒரு காலத்தில் மாநிலத்தை ஆண்ட மன்னர்களும் அடைய முடியாத சிகிச்சை முறை களே இன்று ஏழை மக்களும் பெறுவதற்கேற்ற வசதிகள் ஏற்பட் டுள்ளன. இங்ஙனம் பல்வேறு துறைகளில் மக்களினத்திற்கு நலன்களே யளித்த அறிவியல் அழிவுத் துறையிலும் பங்கு கொண்டுள்ளது. அமிழ்தத்தை காடிப் பாற்கடலைக் கடைந்தபொழுது கஞ்சும் தோன்றத்தான் செய்தது. அந்த கஞ்சு உலகை அழிக்காதிருக்கும் பொருட்டு ஆண்டவன் அதனைப் பருகி கறைமிடற்று அண்ணல்’ ஆன வரலாற்றை இலக்கியம் உணர்த்துகின்றது. அதுபோலவே: மனித கலத்தின்பொருட்டு சாயவகைகளையும், மருந்து வகைகளேயும் தொத்து நீக்கிகளேயும் கல்கிய நிலக்கரித்தார் - ஆராய்ச்சி மனித இனத்தை நாசம் செய்யவல்ல வெடி மருந்துவகைகளேயும், அரிக்கும் தன்மையுள்ள நச்சு வாயுவகைகளையும் அளித்துள்ளது. இரண்டாம் உலகப் பெரும்போரில் அணுகுண்டுகளால் ஏற்பட்ட நாசச் செயல் கள் இன்னும் நம் மனத்தை விட்டு அகலவில்லை. விரைவான போக்கு வரவை அளித்து வரும் விமானங்களேத்தான் அணுகுண்டுகளே வீழ்த்தும் நாசச் செயல்களுக்கும் பயன்படுத்தினர். இவற்றை யெல்லாம் ஒருசேர வைத்து எண்ணிப்பார்த்தால் வாழ்க்கைத் துறையில் எந்த அளவு அறிவியல் துணே புரிந்துள்ளது என்பது தெளிவாகும். எனவே, எதிர்கால உலக நலன் காந்தியுள்ளம் படைத்த அரசியல் அறிஞர்களின் கையில்தான் உள்ளது என்று துணிந்து கூறலாம். அழிவுவேலேயில் துணைசெய்த அணுவின் ஆற்றலே ஆக்க வே8லயில்தான் கொண்டுசெலுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் தொண்டாற்றும் அரசியல் வாதிகளும் அறிவியல் அறிஞர்களும்தான் வருங்கால உலகைக் காத்தல்வேண்டும். எனவே, மக்களினம் அறிவியல் துறையில் மிக மிக அக்கறை கொள்ள வேண்டும் என்பது நன்கு பெறப்படுகின்றது. 5. பண்பாட்டை வளர்த்தல் : அறிவியல் பண்பாட்டையும் வளர்க்கத் துணேபுரிகின்றது என்றும் கூறப்படுகின்றது. அறிவியல் துறைக்கென்றே இலக்கியங்களும் உள. மனிதத் தன்மையைக் கூறும் பிற துறைகளிலுள்ள இலக்கியங்களைப் போலவே இத்துறை இலக்கியங்களும் மனத்திற்கு முறையீடு செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன. அவற்றைப் பயிலுங்கால் மனம் பெருமிதம் கொள்ளு கின்றது : பெருமகிழ்ச்சியையும் அடைகின்றது. அ றி வி ய ல்