பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் பயிற்றுவதன் நோக்கங்கள் 13 ۔ ----سی-بی. துறைகளின் வரலாறுகளும், அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்கை வரலாறுகளும், அவர்கள் வாழ்வில் நேரிட்ட நிகழ்ச்சிகளே யுணர்த்தும் நூல்களும் இத் துறை இலக்கியங்களாகும். எடுத்துக்காட்டாக கலிலியோ, ஐசக் கியூட்டன், வாட், ஃபாரடே, டார்வின், பாஸ்டர், கெல்வின், தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்கோனி, கியூரி அம்மையார், ஐன்ஸ்டைன் போன்ற அறிவியல் மேதைகளின் சேவையைப்பற்றிய இலக்கியங்களைப் பயிலும்பொழுது நாம் பெறும் இன்பத்தையும் பயனயும் அளவிட்டுக் கூறமுடியாது. கடந்த கால அறிவியல் பாடத்திட்டத்தில் இத்தகைய செய்திகளே அறியும் வாய்ப்புகளே நல்காவிடினும் இன்றைய பாடத் திட்டத்தில் அவை சிறப்பாக இடம் பெற்றுள்ளன. இத்தகைய செய்திகளைப் படிக்கும்பொழுது கற்பனேயாற்றல், உற்றுநோக்குக் திறன், தீர்மானம் செய்யும் ஆற்றல், செய்திகளை ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற பண்புகள் வளர இடம் உண்டு. - அறிவியலால் முருகுனர் திறனும் வளர்கின்றது என்று கூறப்படுகின்றது. அறிவு விசாலிப்பதால் மனிதனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது ; இது ஒரு கிலே. ஒன்றற்கொன்று வேறுபாடுள்ள மெய்ம்மைகளே ஒன்று சேர்த்துப் புதிய கருதுகோள்களே ஆக்கு வதிலும் புதியதோர் அறிவுப்பகுதிகளே உண்டாக்குவதிலும் அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி மற்ருெரு நிலை, தான் கண்டறிந்த புதிய துறை ஒன்றற்காகத் தான் சமைக்கும் துணைக்கருவி தனக்கு ஒர் எக்களிப்பை ஊட்டுகின்றது. நுண்ணணுப் பெருக்கியையும் தொலை கோக்கியையும் கொண்டு அழகும் வியப்பும் தவழும் புதிய உலகுகளைக் காண்கின்ருன் அறிவியல் அறிஞன். ஒரு துளி அளவு உயிர்ப்பொருள் அழகு தரும் உயிர்ப்பிராணியாகக் காட்சியளிக்கின்றது : ஒரு சிறு பனிச் செதிள் (Snow-flake) வயிரமணியைவிடச் சிறப்பானதாகக் காண ப் படுகின்றது : மிகச் சேய்மையிலுள்ள விண்மீன் ஒரு பேரண்டமாகத் தென்படுகின்றது. இந்த நிலையில் அறிவியல் பிற கலைகளைப் போலவே முருகுணர்திறனேயும் எப்துவிக்கின்றது. 6. வாழ்க்கைத் துறைகளை அமைத்துக்கொள்ள அடி நிலமாக உதவுதல் : பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாளுக்கர்கள் நேர்முகமாகவோ கேரல்முகமாகவோ தம் தொழில்துறைப் படிப் ை! மேற்கொள்வதற்கு அறிவியல் துணைபுரிகின்றது. பொறியியல் துறை, மருத்துவத் துறை, தொழில் நுணுக்கத் துறை போன்றவற்றைத் தம் வாழ்க்கையில் மேற்கொள்ளும் தொழில் துறையாகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளவும், அத்துறைகளே மேற்கொண்டு தொழிற்பயிற்சி பெறவும் அறிவியல் படிப்பு நேர்முக முறையில் பெருந்துனே புரிகின்றது. அறிவியல் பாடத்தைப் பயிலாதவர்கள் இத்துறைப் படிப்பை மேற்கொள்ள இயலாது. அவர்கள் சட்டப்படிப்பு போன்ற அறிவியல் அடிப்படையில் அமையாத பிற துறைகளைத்தான் தேர்ந் தெடுத்துக்கொள்ளல் வேண்டும்.