பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ክ8 அறிவியல் பயிற்றும் முறை கொண்டு அவற்றிற்குரிய அடிப்படை விதிகளைக் காணல் வேண்டும். அவ்விதிகள் பாடத்திட்டத்தில் அமைதல் வேண்டும். (2) இவ்வாறு தேர்ந்தெடுக்கும் பகுதிகள் அறிவியல் பயிற்று வதன் நோக்கங்களைப் பொறுத்திருக்கும். வளர்ந்தவர்கள் மனத்தைக் கவருவன யாவும் குழந்தைகளின் மனத்தைக் கவரும் என்று சொல்ல முடியாது. பல்வேறு கிலே மாளுக்கர் மனநிலைக்கும் கவர்ச்சிக்கும் ஏற்பப் பாடப் பகுதிகள் அமைதல் வேண்டும். (3) பல்வேறு கிலே மானுக்கர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்றவாறு பாடப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். மானுக்கர் அறிவு வளர்ச்சியில் கல்வித் துறை அறிஞர்கள் மூன்று படிகளைக் குறிப்பிடு கின்றனர். முதற்படியில் வியப்புணர்ச்சியை எளிதில் தூண்டலாம். நாளடைவில் அவ்வுணர்ச்சி திறனுயும் தரத்தை அடைகின்றது. ஆனால் அஃது ஒருபொழுதும் அவர்களிடமிருந்து மறையாததால், ஆசிரியர் செய்து காட்டும் சோதனைகளில் அவ்வுணர்ச்சிக்கேற்ற செய்திகளைச் சேர்க்கலாம். இரண்டாம் படியில் ஆசிரியர் தரும் தகவல்களில் மாளுக்கர்கள் அதிகப்படியான ஊக்கம் காட்டுவர். மூன்ரும் படியில் தகவல்களேக் காரண காரிய முறைகளில் அமைப் பதில் ஆர்வங் காட்டுவர். அவற்றிலிருந்து ஒரு பொது விதியைக் காணும்பொழுது அறிவியலறிஞர்கள் பெறும் ம கி ழ் ச் சி யை ப் போன்றதொரு மகிழ்ச்சியினயும் அவர்கள் பெறுவர். (4) வெவ்வேறு மீப்பண்புகளையுடைய மாளுக்கர் வெவ்வேறு விதப் பகுதிகளே விரும்புவர். சிலர் கணிதத்துறைத் தொடர்புடைய பகுதிகளை அதிகமாக விரும்புதல் கூடும் ; சிலர் உயிரியல்பற்றிய பகுதிகளில் அதிக காட்டம் செலுத்துதல் கூடும். பொதுவாக ஆண்கள் முதலாவதையும் மகளிர் இரண்டாவதையும் விரும்புவர் என்பதில் ஒரளவு உண்மை உள்ளது. (5) மாளுக்கர் வாழும் சூழ்நிலையைப்பற்றி ஆசிரியர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் ; அவர்களுடைய மனப்போக்கையும் ஒரளவு அறிந்திருத்தல் நலம் பயக்கும். காட்டுப்புறங்களில் வாழ்வோரின் அடிப்படை அறிவு ஒரு விதமாகவும், நகர்ப்புறங்களில் வசிப்போரின் அடிப்படை அறிவு பிறிதொரு விதமாகவும் இருக்கும். வணிகர் குடும்பங்களிலிருந்து வருவோரின் மனப்பான்மை ஒரு விதமாக இருக்கும் ; உழவர் குடும்பத்துச் சிறுவர்களின் மனப்பான்மை மற்ருெரு விதமாக இருக்கும் ஆலேத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர் களின் மனப்பான்மை பிறிதொரு விதமாக இருக்கும். பாடத்திட்டம் அமைப்பதில் அச்செய்திகள் கினேவிலிருந்து வழி காட்டல் வேண்டும். (6) அறிவியல் பாடப் பகுதிகள் எப்படியிருக்க வேண்டும் என்று தம் கருத்தைத் தெரிவிப்பதற்குச் சமூகத்திற்கும் உரிமையுண்டு. மாளுக்கர்கள் பள்ளியில் பெறும் கல்வி எந்த முறையில் சமூகத்திற்கு