பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 அறிவியல் பயிற்றும் முறை வேண்டியது மிகவும் இன்றியமையாதது. எனவே, ஒவ்வொரு துறை யிலும் எந்த அளவு பாடத்திட்டத்தில் அமைதல் வேண்டும் ? அவ்வாறு அமைவதற்குரிய காரணங்கள் யாவை ? என்பனவற்றை நன்கு ஆராய்தல் வேண்டும். - முதலாவதாக வரலாற்று முறையில் இதை ஆராய்வோம். வளரும் கிலேயிலுள்ள இளம் கரு அடையும் நிலைகள் அதன் குடிவழியின் வளர்ச்சிப் படிகளைக் காட்டுவனவாகக் கருதலாம். அது போலவே, ஒரு குழந்தையின் கவர்ச்சிகளேயும் மனிதக் குடிவழியின் தொடக்ககிலேப் படிகளைக் காட்டுவனவாகக் கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. மனித அறிவை அடிப்படையில் இரு பிரிவுகளாகக் கொள்ளலாம் : ஒன்று தன்னைப்பற்றியது ; மற்ருென்று தன்னேச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியது. தன்னைச் சுற்றியுள்ள உலகில் பூமியும் பிற அண்டங்களும் உள்ளன. பூமியின்மீது உயிருள்ள பொருள்களும் உள்ளன : உயிரற்ற பொருள்களும் இருக்கின்றன. (1) மனிதனுடைய முதல் கவர்ச்சி உயிருள்ள பொருள்களைப்பற்றியது. எனவே, உயிரியல் அடிப்படையான பகுதிகளுள் ஒன்று. விலங்குகள், பறவைகள் முதலியவை முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்திருத்தல் வேண்டும். அதன் பிறகு, தாவரங்கள் அவன் கவனத்தைக் கவர்ந்து உழவுத் தொழில் மேம்பாடு அடைந்திருத்தல் வேண்டும். பிராணி உலகிலும் தாவர உலகிலும் புத்தம் புதிய வகைகளைப் படைக்கும் முறைகளே நாளடைவில் கற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். எனவே, பொது அறிவியல் பாடத் திட்டத்தில் அன்ருட வாழ்வையொட்டியுள்ள உயிருள்ள பொருள்களேப்பற்றி முதலில் அறிந்துகொள்ளுவது மிகவும் இன்றியமையாதது. (2) தொடக்கத்தில் மனிதன் வானத்தில் தொங்கும் பிற அண்டங்களையும் கவனித்திருத்தல் கூடும். அவற்றைத் தொடர்ந்து உற்றுநோக்கி, விதைக்கும் காலம், அறுவடைக்கேற்ற காலம் முதலிய கால கிலேகளேக் கவனித்திருத்தல் வேண்டும். எனவே, வான நூலும் பாடத்திட்டத்தில் அடிப்படைப் பகுதியாக அமைகின்றது. (3) வேதியியல், இரும்புக் காலம் வெண்கலக் காலங்களின் போதே தல காட்டிவிட்டது. அப்பொழுதிருந்தே மனிதன் உலோகங்களையும் தாதுப் .ெ ட | ரு ள் க ளே யு ம் கையாளத் தொடங்கிவிட்டான். தொடக்கத்தில் மனிதன் பெற்ற வேதியியல் அறிவு அதுபவபூர்வமான தாக இருப்பினும், அது மிகவும் பயன்பட்டது. எனவே, வேதியியலும் அறிவியல் பாடத்திட்டத்தில் இடம் பெறுகின்றது. (4) மேன்மேலும் குழ்கிலேகளிலுள்ள பொருள்களே அறியும் அதுபவத்திலும், அவற்றைத் தன்னுட்சிக்குக் கீழ்க் கொண்டுவருவதிலும் மனிதன் பல்வேறு உபாயங் களைக் கண்டறிந்துள்ளான் : உருளை, நெம்புகோல், சாய்வுதளம் போன்றவை அவற்றுள் சில. எனவே, பொறி நுட்பவியல் துறையில் மனிதன் கவனம் சென்றது ; அதையும் பாடத்திட்டத்தில் அமைத்துக் கொள்ளவேண்டியதுதான். .