பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத்திட்டம் : பொருள் அறுதியீடு 23 அஞ்சியே இதைச் செய்து வருகின்றனர். மனப்பான்மையை ஒரளவு திருத்தக்கூடிய தாய்மொழிமூலம் கற்பிக்கக்கூடிய க ல் விக் கே முட்டுக்கட்டை போடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றுகூடச் சொல்லலாம். எனவே, படித்தவர்களின் முடிவையே சமூகமும் ஏற்று 'காலாவதியான கல்வி முறையையே நடைமுறையிலிருத்தவும் விரும்பு கின்றது. இங்கில, குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே , என்ற திருமூலர் வாக்குப்படி அமைந்திருக்கின்றது என்பதற்கு என்ன தடை ? பொது அறிவியல் கற்பிக்கும் முறையால் ೯೯೯Tಣ್ಯ இங்கிலேயை மாற்றவும் செய்யலாம். இக்கிலே பின்னும் எழாதவாறும் செய்யலாம். முதலில் சமூகத்தின் தேவைகளைக் கவனித்தல் வேண்டும். உடல் நல வாழ்வைக் காட்டும் பகுதிகள், உழவுத்தொழிலில் சில அடிப்படை மெய்ம்மைகள், நவீன உழவுத்தொழில் முறைகள், பயிர்களுக்கு எற்படும் தொற்று நோய்கள், அவற்றை நீக்கும் வழிகள், செடிகளுக்குத் தேவையான உரவகைகள், அவற்றை இடும் புதிய முறைகள் போன்ற அன்ருட வாழ்க்கைக்குப் பயன்படும் செய்திகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். தொடக்க நிலையில் முக்கிய செய்திகளே மட்டிலும் உணர்த்தி உயர்நிலையில் அவற்றைச் சற்று விரிவாகவும், அவற்றை மேற்கொள்வதன் காரணங்களையும் கற்பிக்கச் செய்யலாம். பழைய முறைப்படி வெறும் ஏட்டுக் கல்வியைக் கற்பிப்பதைவிட, புதிய முறைப்படி மேற்கூறிய செய்திகளைக் கற்பித்து நாட்டின் வளத்தையும் அதல்ை நாடு பெறும் பொருளாதார நிலையையும் எடுத்துக் காட்டினல் அது சமூகத்திற்குச் செய்யப்பெறும் பெருந்தொண்டாக அமையும். 2, பிற்காலத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கைத் துறைகளுக்கேற்ற பகுதிகள் : பிற்காலத்தில் மாளுக்கர் பெற இருக்கும் தொழில் துறைப் பயிற்சிக்கு அடிப்படையாக இருப்பதற்கேற்பப் பொது அறிவியல் பாடத்திட்டம் அமைதல் வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பொது அறிவியலாகக் கற்கும் ஒருசில அறிவியல் துறைகளில் கவர்ச்சி ஏற்பட்டு மேற்கல்வியில் அவற்றைச் சிறப்பான முறையில் பயில வழி கோலும் அடிப்படை அமையலாம். வேறு தொழிற்கல்விகளில் பயிற்சி பெற்று வாழ்க்கைத் துறைகளாக அவற்றை மேற்கொள்ள இருக்கும் ஒரு சில மாளுக்கர்களுக்கு இப்பாடத்திட்டம் அதற்கேற்ற மனப் பான்மையை உண்டாக்கலாம். அன்றியும், உயர்நிலைப் பள்ளிப் படிப்புடன் நின்றுவிடக்கூடிய பெரும்பாலோரிடம் விரிந்த மனப் பான்மையை நல்கி, சிறந்த குடிமக்களாகத் திகழ்வதற்கேற்ற கவர்ச்சி களேத் தரும்படியாகவும் இருத்தல் வேண்டும். இதல்ை பெறும் பயிற்சி 1. திருமந்திரம்-1880,