பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அறிவியல் பயிற்றும் முறை .م.م.م.م.م.م.م. ہم یہ عنہم۔ ஆசிரியர் வாயிலாகவோ அல்லது பாட நூல்களின் துஇணக்கொண்டோ தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்ட பிறகுதான் அவற்றைப் பாடத்திட்டத்தில் அமைத்தல் வேண்டும் என்று கருதுதல் தவறு. சுவாசித்து வெளிவிட்ட காற்றில் கரியமிலவாயு இருக்கிறதென்பதை அது தெளிவான சுண்ணும்பு நீரைப் பால் போல் ஆக்குவதிலிருந்தே மெய்ப்பித்துக் காட்டிவிடலாம். அதற்காகக் கரியமில வாயுவை வேதியியற் பொருள்களிலிருந்து தயாரித்து அதன் குணங்கள் யாவற்றையும் மெய்ப்பித்துக் காட்டும் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லே. அறிவியல் பாடத்தில் மாணுக்கர்கள் கற்க வேண்டிய பகுதிகளே மூன்று வகையாகப் பாகுபாடு செய்யலாம். அவை : (1) கற்பிக்கும்பொழுது செய்து காட்டல் மூலம் மெய்ப்பித்துக் காட்டக்கூடியவை : - (2) சிறிது காலம்வரை ஏற்றுக்கொண்டு பிறிதொரு சமயம் மெய்ப்பித்துக் காட்டப்படுபவை : (3) ஆசிரியர் கூற்றைக் கொண்டோ பாடநூலைக் கொண்டோ ஏற்றுக்கொள்ள வேண்டியவை. - (1)-ஆம் பிரிவிலுள்ளவற்றைப்பற்றிச் சிறிதும் கவலைகொள்ள வேண்டியதில்லை. (2)-ஆம் பிரிவிலுள்ளவற்றை ஆசிரியர் கற்பிக்கும் பொழுது சில விவரங்களேத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளச் செய்து பிறிதொரு சமயம் அவற்றைச் செய்துகாட்டல்மூலம் மெய்ப்பித்தல் வேண்டும் : ஆசிரியர் அவற்றை நினைவில் வைத்திருந்து அவசியம் செய்து காட்டல் வேண்டும். சோம்பல் காரணமாகவோ மறதி காரண மாகவோ காட்டாதிருத்தல் ஆகாது. (3)-ஆம் பிரிவிலுள்ளவற்றைக் கற்பிக்கும்பொழுது சில வெளிப்படை மெய்ம்மைகளே அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்குதல் வேண்டும் ; ஏனேய பாடங்களிலிருப்பது போலவே அறிவியலிலும் அத்தகைய வெளிப்படை மெய்ம்மைகள் உள என்பதைத் தெளி வாக்குதல் வேண்டும். பாட வளர்ச்சி கருதியும் மெய்ம்மை காணும் நோக்கத்தை யொட்டியும் அவ்வாறு ஏற்றுக்கொள்வது இன்றியமை யாதது என்பதை விளக்கிவிட்டால் போதும், - - பாடப் பகுதிகளைக் காரண காரிய ஒழுங்கில் அமைப்பது எளிது என்று சிலர் கருதுதல் கூடும் அது தவறு. அவ்வாறு அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன ; அவை யாவும் காரண காரிய ஒழுங்கு என்றே வழங்கப்பெறுகின்றன. வரலாற்று ஒழுங்கையும் காரண காரிய ஒழுங்கு என்று கூறலாம். ஒரு பொது விதியிலிருந்து படிப்படியாகச் செய்திகளை அறிதலும் காரண காரிய ஒழுங்கு என்றுதான் வழங்கப்பெறல் வேண்டும். வேதியியலைச் சார்ந்த மெய்ம்மைகளே அவ்வொழுங்கைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.