பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடத் திட்டம் : பொருள் அமைப்பு 33 சமயத்தில் கற்றுக்கொடுத்தால் மாணுக்கர்கள் அவற்றை உணர்ந்து கொள்ள இயலாது. இம்முறையில் பொருள்களே உளவியற் கருத்துக்களே யொட்டியும் காரணகாரியத் தொடர்புடனும் அமைத்துக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு கிலேயிலும் குழந்தைகளின் கவர்ச்சிக் கேற்ற பொருள்களே எடுத்துக்கொண்டு கற்பிக்க இங்கு இடம் உள்ளது. கீழ் கிலே வகுப்புகளிலிருந்து அறிவியல் பாடத்தைத் தொடர்ந்து கற்பிக்கும் வாய்ப்பை ஒரே ஆசிரியருக்குக் கொடுத்தால் இம்முறை மிக வெற்றியுடன் பரிமளிக்கும். இதனுல் மாணுக்கர்களிடம் கவர்ச்சி குன்ருது நல்ல முறையில் கற்பிக்கும் வழிகளே அமைத்துக் கொள்ள முடியும். அங்ங்ணமின்றி, பல ஆசிரியர்கள் யாதொரு தொடர்பும் திட்டமும் இன்றிக் கற்பிக்கும் கிலே ஏற்பட்டால் இம் முறை ‘கூறியது கூறல் என்ற குற்றத்திற்குட்பட்டு கற்பிக்கும் பாடங்களும் கவர்ச்சியையும் புதுமையையும் இழந்துவிடல் கூடும். இம்முறையை மேற்கொண்டு கற்பிக்கும் ஆசிரியர், கூறவேண்டிய அனேத்தையும் முதல் ஆண்டிலேயே கூறிப் பாட அழகைக் குன்றச் செய்யாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஒவ்வோர் ஆண்டிலும் ஒரே பொருள் புதுமையும் அழகும் கொண்டு மிளிரும்படி செய்தல் மிகவும் இன்றியமையாதது. என்றும் புதிய பிரச்சினேகள் தீர்க்கப்பெறுதல் வேண்டும் ; புதிய சங்கடங்களேக் காணல் வேண்டும் புதிய புதைபொருள்களும் வியத்தகு செய்திகளும் தென்படல் வேண்டும். இந்தக் கூறுகள் மிளிருமாறு கற்பித்தலே அமைத்துக்கொண்டால் இவ்வொழுங்கில் அமைக்கப்பெறும் பாடத்திட்டத்தால் நிறைந்த பயன்களே எதிர் பார்க்கலாம். 5. தலைப்பு ஒழுங்கு : கற்பிக்க வேண்டிய பொருள்களேச் சில தலைப்புகளின் கீழ் அடக்கி ஒவ்வொரு தலைப்பாகக் கற்பித்தலைத் *தலைப்பு ஒழுங்கு என்று வழங்குவர். இந்த முறையில் அறிவியல் பாடத்தை பெளதிக இயல், வேதியியல், உடலியல், வானநூல் என்று பிரிப்பதற்குப் பதிலாகச் சில தலைப்புகளின் கீழ் அடக்கிவிடுவர். சாதாரணமாக உயர்நிலைப் பள்ளிக்குரிய அறிவியல் பாடப் பகுதிகளே வீடு, போக்குவரவு, ஈடுபாட்டுக்கலே, தொழிற்சாலை, உடல் கலவழி, தோட்டம், வயல், நாட்டுப்புறம் என்ற தலைப்புகளில் அடக்கலாம். கடை முறையிலுள்ள நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளுக்குரிய அறிவியல் பாடத் திட்டங்களைக் கூர்ந்து நோக்கினுல் அவை இம்முறையில் அமைக்ககப் பெற்றிருப்பது தெரியவரும். அன்றியும், அவை பொதுமைய ஒழுங்கும் தலைப்பு ஒழுங்கும் சேர்ந்த ஒரு கலவை முறையில் அமைக்கப்பெற்றிருப் பதையும் அறிந்துகொள்ளலாம். உண்ணுதல், சுவாசித்தல், பிறப்பும் வளர்ச்சியும், அசைதல், நல்வாழ்வு, வீடு கட்டுதல், சூழ்நிலையை ஆராய்தல், இயற்கையாற்றல்களைப் பொதுநலனுக்குப் பயன் அ, ப. மு- 3