பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முதற்பதிப்பின் நூல்முகம் தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல், கண்ணிர்த் துளிவரவுள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் யேருளும் தொழில்கள் அன்ருே? - ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற்கு , இவையனைத்தும் உதவு வாயே. - -பாரதி பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்ற பாரதியாரின் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானல் தாய் மொழியிலேயே எல்லாப் பாடங்களேயும் கற்பித்தல் வேண்டும். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும்கூடத் தாய்மொழி வாயிலா கவே கற்பிக்கும் கிலே ஏற்பட்டால்தான் எத்தனையோ விதங்களில் விளுகப்போகும் ஆற்றல்கள் சரியான முறையில் பயன்படும். தாய் மொழியிலும் வட மொழியிலும் உள்ள சமயக்கருத்துக்களையும் அம் மொழியிலுள்ள கல்வெட்டுக்கள் போன்றவற்றையும்கூட ஆங்கிலத்தில் படிப்பதுதான் சிறப்பு என்று கருதும் குறுகிய எண்ணமும் நீங்கும். இராஜாஜி அவர்கள் சொல்லுவது போல, பலர் கலைச்சொல் பிரச்சினே யையும் போதனமொழிப் பிரச்சினையையும் ஒன்று சேர்த்துக் குட்டையைக் குழப்பி’ப் போதனுமொழிப் பிரச்சினையை என்றும் திராத பிரச்சினே போல் காட்டுகின்றனர். மக்கள் நலனையும் காட்டு கலனையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தங்கள் போக்கே சரி என்று வக்கீல் வாதம் செய்யாது, தெளிவாகவும் விரைவாகவும் பொருளறிவு பெறுவதற்கு வழி காண்பதில் பரிவுடனும் இதயத் தூய்மையுடனும் ஒத்துழைத்தால் அனைத்தும் சீர்படும். ஆங்கில மொழியை இன்று உலகமனைத்தும் புகழ்ந்து பாராட்டு வதற்கு மில்ட்டனும் ஷேக்ஸ்பியரும் படைத்துள்ள இலக்கியங்கள் மட்டும் காரணமன்று. உலகிலுள்ள கலைகளனைத்தும் அம்மொழியில் யாவரும் உணரக்கூடிய முறையில் வெளியிடப்பெற்றிருப்பதுதான் அம்மொழியின் உயர்வுக்குக் காரணமாகும். அது போலவே, தமிழ் 1. பாரதியார் : பாஞ்சாலி சிதம்-154 -...---- 2. பாரதியார் கவிதைகள்-முரசு, 30 - 3. கல்கி-செப்டம்பர் 28-ஆம் தேதி இதழ் (1956)