பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறிவியல் பயிற்றும் முறை, பி ன் ன த ற் கு க் குறைந்த காலம் போதும். எனினும், ஒரளவு அவை இ&ணந்து செல்லுமாறு சரிக்கட்டிவிடலாம். செயல் முறைத் திட்டத்திற்கும் கொள்கைகளைக் கற்கும் திட்டத்திற்கும் சிறிதும் பொருந்தாத பண்பறி பகுப்புப்பற்றிய சோதனைகளைக் கொண்ட பழைய காள் திட்டம் போன்ற பாடத்திட்டங்களால் சிறிதும் பயன் விளையாது. கல்லூரிகளில் உயர்நிலை அறிவியல் பயிலும் மாளுக்கர்களுக்கு அமைக்கப்பெறும் பாடத்திட்டங்களில் இவ்வித இணைப்பு நடை முறைக்கு ஒத்து வராது. செயல்முறைத் திட்டமும் கொள்கைகளைக் கற்கும் திட்டமும் தனித்தனியாகவே இயங்கிக்கொண்டிருக்கும். எனினும், கன்ருகச் சிந்தித்துத் திட்டங்களே வகுத்தால் சில பகுதிகளிலாவது இயன்றவரை இரண்டு திட்டங்களும் இணைந்து செல்லுமாறு அமைத்துக்கொள்ளல் முடியும். மேலே கூறப்பட்ட முறைகளில்தாம் பாடப்பொருள்களே அமைக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனே ஒன்றுமில்லை ; அவை ஒவ்வொன்றும் தனித்தனி என்ருே, ஒன்ருேடொன்று பொருந்தா என்ருே கருதுதல் கூடாது. ஒவ்வொரு முறையும் முடிவான பாடத் திட்டத்தை வரையறுப்பதில் பெருந்துணே புரியும் : ஒவ்வொரு முறையிலும் சில சில கூறுகளே மேற்கொண்டால்தான் சிறந்ததொரு பாடத்திட்டத்தை அமைக்கலாம். சிறந்த பாடத்திட்டம் : சிறந்த பாடத்திட்டம் எது? இதற்குச் சரியான விடை காண்பது அரிது. ஒன்ருேடொன்று சரியாகப் பொருந்தாத பல பொருள்களேத் தேவைக்கேற்றவாறு இணேத்து உருவாக்கப்பெற்ற பாடத்திட்டமே சிறந்தது என்று கூறலாம். சிறந்த பாடத்திட்டத்தை அமைப்பதற்குக் கீழ்க்கண்ட முறையை மேற் கொள்ளலாம். உயிரியல் பகுதிகளில், பெளதிக இயல் பகுதிகளிலிருப்பது போல், நெருங்கிய காரணகாரியத் தொடர்பு இல்லை. பெளதிக, வேதியியல் களிலுள்ள விதிகளேயும் எடுத்துக்காட்டுகளேயும் பொறுக்கி எடுத்து அவற்றை, அவை ஒன்ருேடொன்று பொருந்தும் முறையில் வரிசைப் படுத்துதல்வேண்டும். பிறகு, இடத்திற்கேற்றவாறு உயிரியல் பகுதி களிலுள்ள பொருள்களே அவற்றுடன் இணைக்கலாம். உயிரியல் பகுதிகளே ஒர் ஆண்டில் எல்லாப் பருவங்களிலும் பயனுள்ள முறையில் கற்றல் இயலாத தொன்ருதலின், அவற்றைப் பாடத்திட்டத்தில் பரவலாக இணேத்தல் வேண்டும். இதிலிருந்து பெளதிக இயல் பகுதிகள்தாம் முக்கியம், உயிரியற் பகுதிகள் அத்துனே முக்கியமன்று என்று கருதுதல் தவறு. உயிரியல் பகுதிகளே எப்படி வேண்டுமானலும் அமைத்துக்கொள்ளலாம், அமைத்துக்கொள்ளுதல் முடியும் என்பதற் காகவே இம்முறையை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை கினேவிலிருத்தல் வேண்டும்.