பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 அறிவியல் பயிற்றும் முறை همین مجمسه. که مهیی بسیب میع 1. பிரச்சினைகளை அறிவித்தல் : குழந்தைகள் கவர்ச்சியுடையன வாகவும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டனவாகவு முள்ள பிரச்சினைகளையே விரும்புவர். எனவே, பிரச்சினேகளே அறிவித்தலில் மாளுக்கர்களும் பங்கு கொண்டால்தான் இது சாத்தியப் படும். ஆசிரியரும் மாளுக்கர்களும் சேர்ந்து ஒர் ஐக்கிய முறையில் ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதியிலுள்ள பொருள்களே மாளுக்கர்களின் அறிவு கிலேயில் வைத்து ஆராய்ந்து பிரச்சினைகளே அவர்களாகவே காணச்செய்தல் வேண்டும். சில சமயம் ஆசிரியராகவே சில சோதனைகளைக் காட்டல், சில அநுபவங்களேக் கூறல் முதலியவற்றை மேற்கொண்டு மாளுக்கர்களே அவற்றைப்பற்றி வினுக்கள் எழுப்பச் செய்து பிரச்சினைகளைக் காணச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, வீட்டுக்கூரை வேய்வதற்குப் பயன்படும் இரும்புத் தகடுகள் ஏன் துருப்பிடிக்கின்றன என்பதை ஆராயலாம். உலகில் இரும்புத் தகடுகளைக்கொண்டு கூரை வேய்வதில் ஏராளமான பொருட்செலவு ஏற்படுகின்றது அடிக்கடி தகடுகளைப் புதுப்பிப் பதற்குச் செலவிடும் தொகையை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பயன்படுத்தலாம். தகடுகள் துருப்பிடித்துக் கெட்டுக் கூரைகள் ஒழுகுவதால் பல்வேறு இழப்புகள் நேரிடும். மழை பெய்யுங்கால் வீட்டினுள் இருக்கும் பொருள்கள் கெடும் ; சுவர்களில் ஈரம் தாக்கி அவை விழ நேரிடும் : துருப்பிடித்த கூரை கண்ணுக்கு அழகாக இராது ; பிறர் இத்தகைய கூரையைக் கண்டால் அவ்வீட்டில் குடியிருப்போரைப்பற்றிக் குறைவாக எண்ணுவர். இவ்வாறு வகுப்பில் உரையாடி மாளுக்கர்களின் கவர்ச்சியைத் தூண்டி பிரச்சினேயைக் காணும்படி செய்யலாம். பிரச்சினேகள் உருவாகும்பொழுது ஆசிரியர் நல்ல பிரச்சினைகளின் இயல்புகளே மானக்கர்களுக்கு உணர்த்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள. பிரச்சினைகள் மாளுக்கர்களின் அறிவுகிலக்கு உகந்தனவாக இருத்தல் வேண்டும். அவை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்’ என்ற பெற்றியுடன் அமைதல் வேண்டும். ஒரே பிரச்சினையில் எல்லாச் செய்திகளேயும் அடக்குதல் கூடாது ; ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டிலும் கூறும்படியாக அமைதல்தான் சாலச் சிறப்புடைத்து. பிரச்சினேகள், கைவசமுள்ள கருவிகரணங்களேக் கொண்டே முடிவு காணக்கூடியனவாகவும் அமைதல் வேண்டும் ; அவை மானுக்கர்களுக்கு உடனே பயன் நல்குவனவாக அமையின் நன்று. இத்தகைய கூறுகளேத் தெளிவாக அறிந்த பிறகு பிரச்சினைகளே எளிய இனிய மொழியில் சுருங்கிய முறையில் கூறச்செய்தல் வேண்டும். கையாளப்பெறும் மொழி : அறிவியல் துறையில் கையாளப் பெறும் மொழி தெளிவானதாக இருத்தல் வேண்டும். அறிவியல்