பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் முறை - 43 மெய்ம்மைகளே உணர்த்தும் கலைச்சொற்கள் திட்டமானவையாக இருக்கும் : ஒரு வரையறையுடன் அவை வழங்கப்பெறும். அறிவியலேப் பயில்வோர் பல்வேறு வரையறைகளைக் கற்க நேரிடும். இவ்வரையறைகளே உண்டாக்கும் முறைகளே அவர்கள் அறிந்தாலன்றி, அவர்கட்கு அவற்ருல் யாதொரு பயனும் இராது. வரையறைகளே உண்டாக்கும் முறைகளே அறிந்தால்தான் அவை எவ்வாறு தெளிவான சிந்தனேக்குத் துணேயாக உள்ளன என்பதை உணர்தல் முடியும், அறிவியல் ஆசிரியர்கள் வரையறைகளேயும் கலைச் சொற்களேயும் திரும்பத் திரும்பச் சொன்னல் மட்டிலும் போதாது; அவற்றின் உண்மைப் பொருளே நன்கு உணருமாறு செய்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, மாளுக்கர்கள் தனிமங்களுக்கும் கூட்டுப் பொருள்களுக்கும் உள்ள வேற்றுமைகளே அறியும் பகுதியைக் கற்பதாகக் கொள்வோம். இதற்காக அவர்கள் வேதியியற் சிதைவு, வேதியியற் கூடுகைபற்றிய பல்வேறு சோதனைகளேச் செய்வர். இதற்கு முன்பதாக அவர்கள் தனிமம்', 'கூட்டுப் பொருள்” என்பன வற்றின் இலக்கணங்களே அறிய வேண்டும் என்பதில்லை. சோதனே களுக்குப் பின்னர் வரையறைகளே உண்டாக்கும் முறைகளே அறிதல் சிறப்பாகும். ஆசிரியர் முதலில் சீமைச் சுண்ணும்பு, மெர்க்குரிக ஆக்ஸைடு போன்ற பொருள்களுக்கும், கார்பன், தாமிரம், ஆக்ஸிஜன் போன்ற பொருள்களுக்கும் உள்ள வேற்றுமைகளேக் கூறலாம். பிறகு மாளுக்கர்களேயே வரையறைகளே உண்டாக்கச் சொல்லலாம். அவர்கள் கூறும் வரையறைகள் திட்டமானவையாகவும் போதுமானவை யாகவும் இரா , அவ்வாறு இருந்தாலும் அவற்றைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு பல விளுக்களாலும் திறனாய்வு முறைகளாலும் சரியானவையாக மாற்றுதல் வேண்டும். கொள்ளவேண்டிய எல்லா வற்றிற்கும் தள்ளவேண்டிய அனைத்திற்கும் பொருந்துமாறு சொற் பொருள் அமைதலே சரியான வரையறையாகும் என்பதை மாளுக்கர்கள் தெளிவாக உணரச்செய்தல் வேண்டும். வரையறை இனிய, எளிய, தெளிவான மொழியில் அமைந்தால்தான் சொற்களின் பொருள் சரியாக வரையறைப்படும். இவ்வாறு மாளுக்கர்களுக்குப் பயிற்சி யளிப்பதால் காலச் செலவு ஏற்படினும் நிறைந்த பயன் உண்டாகும் என்பதற்கு ஐயமில்லை. அன்ருட வாழ்க்கையில் குறுக்கிடும் அரசியல், பொருளியல், சமூக இயல்பற்றிய பிரச்சினை களேயும் இவ்வாறு தெளிவாக வரையறை செய்தல் பெரும் பயன் விளேக்கும் என்பதையும் மாணுக்கர்கள் அறியும்படி செய்தல் அறிவியல் ஆசிரியர்களின் கடமையாகும். --م--ميمهم مصمميمه * இவ்வாறு செலவிடப்பெறும் பாடவேளையை மிகவும் பயனுள்ள தாகக் கருதலாம். மானுக்கர்களேத் தம் புலன்களே நன்கு பயன் படுத்துமாறு கூறியும், தாம் கண்டனவற்றைப் பகுத்துப் பார்க்குமாறு