பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డీడీ அறிவியல் பயிற்றும் முறை ஏவியும், தெரியாதனவற்றைத் தன்னை வினவித் தெரிந்துகொள்ளும்படி செப்பியும், தம் சூழ்நிலைகளில் காணும் பொருள்களைப்பற்றியும் அநுபவங்களைப்பற்றியும் நன்கு சிந்திக்குமாறு தூண்டியும் இப் பாடவேளையைப் பயனுள்ளதாக்கலாம். பிரச்சினைகளேத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தெளிவாகக் கூறிய பிறகு அவற்றிற்கு விடை காண்பதில் கருத்தினைச் செலுத்த வேண்டும். 2. பிரச்சினைகளைப் பாகுபாடு செய்தல் : எடுத்துக்கொண்ட பிரச்சினையைத் தெளிவாகக் கூறிய பிறகு, அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராயலாம். அவ்வாராய்ச்சி, பிரச்சினே முழுவதற்கும் தீர்வுகாணத் துக்ணயாக இருக்கும். மேற்காட்டிய இரும்புத் தகடு துருப்பிடித்தல்” பிரச்சினையை இவ்வாறு கூறுபடுத்தலாம் : - (1) சதா குளிர் காலம் இருப்பதால் துருப்பிடிக்கின்றதா ? அன்றி, சதா வெயில் அடிப்பதால் துரு ஏறுகின்றதா ? (2) வெப்பமான இடங்களில் துரு விரைவாக ஏறுகின்றதா ? அன்றி, தட்பமான இடங்களிலா ? (3) வேறு உலோகத் தகடுகள் கிடைக்குமா ? அவற்றிலும் துரு ஏறுகின்றதா ? - (4) இரும்பிற்கும் துருவிற்கும் என்ன வேற்றுமை ! (5) இரும்புத் தகடாலான கூரைகளுக்கு வண்ணம் பூசப் படுகிறதே, அதனால் யாதேனும் பயன் உண்டா? அல்லது வனப்பின் பொருட்டாக மட்டிலுமா ? (6) இரும்புத் தகட்டின் எப்பாகத்தில் முதன் முதலாகத் துரு ஏறுகின்றது ? 3. பிரச்சினைக்குரிய விடைகளின் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல் : பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியமான படிகளில் இது மிகவும் சிறப்பான படியாகும். மேலே எழுப்பியவை போன்ற வினுக்களே கன்கு பரிசீலனே செய்து அவற்றிற்கு இறுக்கப்பெறும் விடைகளேயும் ஒரு திட்டமான முறையில் நன்கு ஆராய்தல் வேண்டும். இவ்வாறு எடுகோள்களேயும் பிற தகவல்களேயும் திரட்டுவதற்கு எல்லேயே இல்லே. ஆய்வகம், பள்ளியில் பிற பகுதிகள், விளேயாட்டு மைதானம், வீடு, உள்ளூர், வெளியூர் முதலிய இடங்களில் பெறும் அதுபவம் இதற்குத் துணைபுரிதல் கூடும். பல நூல்களேப் படிப்பவர்கள், கூர்ந்து நோக்கும் திறனுள்ளவர்கள் பிறரைவிடப் பல செய்திகளேத் திரட்டுதல் கூடும். - இங்கிலேயில் பயன்படும் அடிப்படைத் திறன்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம் :