பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் முறை - - - 45 ഹ~ (1) நூலகத்திலுள்ள நூல்கள், மேற்கோள் நூல்கள், பருவ வெளியீடுகள் முதலியவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்தத் தெரிதல் ; . (2) நூலிலுள்ள உள்ளுறை, இயல் தலைப்புகள், குறிப்புப் பொருளகராதி, திரி சொல்லகராதி, வேறு பின்னிகிணப்புகள் முதலிய வற்றை கன்முறையில் கையாளத் தெரிதல்: (3) நூல்களில் காண்பனவற்றைப் படித்துப் பொருளுணர்தல், கலைச்சொற்களறிவு பெறுதல், படித்த கருத்தைத் தெளிவாகக் கூறும் திறன், படிக்கும் திறன்ன வளர்த்தல் போன்றவற்ருல் சரியான தகவல் களேச் சேர்த்தல்; (4) சோதனைகளால் தகவல்களைச் சேர்த்தல் : கூர்ந்து நோக்கும் திறன், சோதனைகளிலுள்ள கூறுகளே உணரும் திறன், அவற்றில் கிலேயாகவுள்ள கூறுகளேக் கானும் திறன், சோதனைகளைச் செய்யும் பல்வேறு திறன்கள், துனேக் கருவிகளைக் கையாளும் திறன் முதலியவை இதற்குப் பெருந்துணையாக இருக்கும்; (5) பிற துறை மக்களேயும் அறிஞர்களேயும் சந்தித்துப் பேசுவதாலும், அவர்களுடன் கலந்து ஆய்வதாலும் செய்திகளே அறிதல். - (6) பேசும் படங்கள், நிழற்படங்கள் முதலியவற்றைப் பார்ப்பதால் எடுகோள்களே அறிதல். எனவே, கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும்' புலன் களால் பெறும் அறிவைவிட, அப்புலன்களின் திறன்களேப் பன்மடங்கு பெருக்கிக் காட்டவல்ல, ஒலிபெருக்கி, உருப்பெருக்கி, தொலே நோக்கி முதலிய கருவிகளைக்கொண்டு அறியும் அறிவு சரியாக இருக்கும் : இம் முறையில் அடையும் எடுகோள்களில் பிழைகள் நேரிடா. அளவை முறைகளே மேற்கொள்ளும்பொழுது மிகச் சிக்கலான அமைப்புகளைக் கொண்ட திரவ மட்டமானி, நிறமாலைமாணி, கோளமானி முதலிய கருவிகளைக் கையாளலாம். இவ்வாறு காணமுடியாத பிற செய்திகளே ஏற்ற சோதனைகளால் அறியலாம். சோதனைச்சாலே என்பது வெளியுலகத்தில் காணும் நிகழ்ச்சிகளே மிகச் சிறிய அளவில் கட்டுப் பாட்டுக்கடங்கிய சூழ்நிலையில் உண்டாக்கும் இடமாகும். மேலே கூறிய எடுத்துக்காட்டிற்கு மீண்டும் வருவோம். ஒரு பெரிய கூரை வேயும் இரும்புத் தகட்டைச் சோதனைச்சாலைக்குக் கொண்டு வருவதென்ப இ! இயலாத செயல் : பெரும் பொருட்செலவையும் ஏற்படுத்தும். ஆனல் ஒரு பெரிய தகட்டில் வெட்டியெடுக்கப்பெற்ற ஒரு சிறு துண்டோ, அல்லது வீடு கட்டும் இடங்களில் உதவாதென்று தள்ளுபடி செய்யப் பெற்றுக் கிடக்கும் ஒரு சிறு துண்டோ, சோதனைச்சாலே வேலைக்குப் போதுமானது. 1. குறள்-101 1,