பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் முறை 47 அலுமினியத் தகடுகள், காரீயத் தகடுகள் பயன்படுத்தப்பெறுகின்றன என்பதை மாணுக்கர்களிடமிருந்து வருவிக்கலாம்; அவற்றில் இரும்பைப் போல் துரு ஏறுகின்றனதா ? வேகமாகவா? மெதுவாகவா ? அன்றி, இல்லையா ? என்று வினவி, அவற்றின் துண்டுகளேக் குளிர்ந்த நீரிலும் கொதித்த நீரிலுமாகப் போட்டு நான்கு சோதனைக் குழாய்களிலும் பெயரொட்டி மற்ருே.ரிடத்தில் வைக்கச் செய்தல் வேண்டும். இவற்றைத் தவிர, இன்னும் வேறு உலோகத் தகடுகள் பயன் படுத்தப்பெறுகின்றனவா என்பதை வினவி, துத்தநாகத் தகடு, தகரம் (பால்பவுடர், ஒவல் முதலிய உணவுப்பொருள், மண்ணெண்ணெய் வைப்பவை) பயன்படுத்தப்பெறுகின்றன என்பதை மானுக்கர்களிட மிருந்து வருவித்து, அவற்றின் துண்டுகளேக் கொதித்த நீரிலும் குளிர்ந்த நீரிலும் போட்டு வைக்குமாறு ஏவுதல் வேண்டும். - இந்தச் சோதனைகளின் முடிவுகள், மேலே எழுப்பப்பெற்ற பிரச்சினேக்கு விடை காண உதவுதல் கூடும். வெப்ப நாடுகளில் குளிர்காடுகளேவிட இரும்புத் தகடுகளில் விரைவாகத் துருப் பிடிக்கின்றது என்பதை மாளுக்கர்கள் நேரடியாக அறிய இயலாது. அதற்கேற்ற சோதனைகளேயும் சோதனைச்சாலையில் செய்ய இயலாது. எனவே, அவர்கள் வேதியியல் செயல்களே வெப்பம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்கும் பாடம் வரும் வரையிலும் காத்திருத்தல் வேண்டும் : அன்றி, வெப்பநிலை தாழ்ந்திருக்கும்பொழுது வேதியியல் செயல்கள் மெதுவாகவே நடைபெறும் என்ற மெய்ம்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யாராவது ஒரு மாளுக்கன் இரும்பு துருப்பிடிக்கும்பொழுது அது காற்றிலுள்ள ஆக்ஸிஜனே எடுத்துக்கொள்ளுகின்றது என்று கூறினல், உடனே அந்தச் சோதனையைச் செய்ய முனைதல் வேண்டும். ஒரு பக்கம் மூடியிருக்கும் ஒரு பெரிய கண்ணுடிக் குழலில் சிறிது நீரை எடுத்துக் குலுக்கியபின் அதை ஊற்றிவிட்டு, அதில் சிறிது இரும்பு அரத்துரள்களேத்தூவில்ை அவை ஈரமான இடத்தில் ஒட்டிக்கொள்ளும். பிறகு அக்குழலேத் தலைகீழாகக் கவிழ்த்து நீருள்ள ஒரு மூக்குக் குவளையில் வைத்துவிட வேண்டும். மேற்கூறியவாறு தகவல்களேயும் எடுகோள்களேயும் சேர்த்த பிறகு அவை சரியானவையா என்பதை உறுதி செய்துகொள்ளல் வேண்டும். உற்றுநோக்குதலும் நாம் கையாளும் சோதனைக் கருவிகளும் சரியாக இருந்தால் அவையும் சரியாக இருக்கும். நாம் எதை அளக்கவேண்டுமோ அதை மட்டிலுந்தான் அளக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட எடு கோளிற்குத் தொடர்புள்ள எல்லாக் கூறுகளேயும் கவனிக்கவேண்டியது அறிவியல் அறிஞனின் கடமை. அவனுடைய அறிவும் அதுபவமும் அனைத்தையும் தரக்கூடும் என்று சொல்ல முடியாது. எல்லாக் கூறுகளே யும் அறிவதுடன் அவற்றின் மாறக்கூடிய கூறுகளையும் தெரிந்திருத்தல்