பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 அறிவியல் பயிற்றும் முறை முடிவுகள் யாவும் விதிகளே ஆக்குவதற்குப் பயன்படும் என்று கினைத்தல் தவறு. பெரும்பாலும் சோதனைகளின் முடிவுகள் ஒரு பொதுவிதிக்கு அரணுகத்தான் அமைதல் கூடும். பெரும்பாலும் ஆசிரியர்கள் சோதனையின் முடிவுகளே இனப்படுத்துவதில்தான் மாளுக்கர்கட்குப் பயிற்சி அளிக்கவேண்டும். ஒரு பொது விதிக்கு அரணுக அமையாத முடிவுகளைப் புதியதொரு விதியை உண்டாக்கு வதற்குப் பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட இரும்பு துருப்பிடித்தல் சோதனைகளிலிருந்து காற்று, துருப்பிடித்தலேத் தூண்டுகின்றது என்பது பெறப்படுகின்றது. இரும்புக்கும் காற்றுக்கும் தொடர்பில்லாது செய்தால் (துரு ஏருத உலோகப் பூச்சால்), அந்த இரும்பு துருப்பிடிப்பதில்லை. கூரை வேய்வதற்கு பயன்படும் இரும்புத் தகட்டில் கீறல் இருந்தாலும் சரி, வெட்டு வாயில் பூச்சு இல்லாதிருந்தாலும் சரி, அத்தகட்டிற்கு அப் பகுதிகளில் பாதுகாப்பில்லே . ஆதலால் அப் பகுதிகளில் துரு ஏறுகின்றது. வண்ணம் பூசுதலால் இரும்புத் தகட்டில் காற்று படுவதில்லே. இயன்றவரை தகடுகளில் கீறல்கள் ஏற்படரீமலும், ஆணித் துவாரங்களே அதிகமாகப் போடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட பரிசோதனைகளில் இத்தகைய முடிவுகளே அடைய லாம் : கூரைவேயும் இரும்புத் தகடுகளைப் பாதுகாப்பதற்காகப் பூச்சு பூசப்பெற்றுள்ளது. இப் பூச்சு வேறு உலோகத்தாலானது. வண்ணம் பூசிய இரும்பில் துரு ஏறுவதில்லை. தண்ணீரும் காற்றும் இருந் தால்தான் துரு ஏறுகின்றது. துருப்பிடித்தலில் காற்றின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இரும்புத் தகடுகளில் காற்றுப் படிந்து துருப்பிடிக்கா திருப்பதற்காக வண்ணம் பூசப்படுகின்றது. ஒரு பிரச்சினையைத் திர்க்க முனையும்பொழுது வேறு வினுக்கள் எழுதல் கூடும். அவற்றிற்கு விடை கண்டபிறகுதான் அடுத்த படியில் இறங்க வேண்டும். ஒவ்வொரு விவிைலும் பினவைப் பாகுபாடு செய்து பரிசிலித்தல், ஏற்ற சோதனைகளே மேற்கொள்ளல், தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு விளக்கம் காணல் என்ற படிகளே மேற்கொள்ளல் வேண்டும். இந்தப் பிரச்சினேயில் இரும்புத் தகட்டின்மீது பூசப்பெற்ற வேறு உலோகம் யாது ?’ என்ற வின எழும். உயர்கிலேப் பள்ளி நிலையிலுள்ள மாளுக்கர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது இஃது எனினும், ஒரு சிலர் துத்தநாகம், ஈயம், காரீயம், அலுமினியம் என்று விடை தரலாம். ஆனுல் ஆசிரியர் அந்த உலோகம் துத்தநாகம் என்றும், கூரை வேயப் பயன்படுத்தும் இரும்புத் தகடுகள் நாகப்பூச்சிரும்பு (Galwanized iron) என்று வழங்கப்படுகின்றன என்றும் கூறுதல் வேண்டும். இரும்புத் தகடுகள் மிகத் தூய்மையான கிலேயில் உருகும் துத்த