பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பயிற்றும் முறைகள்-1 SAASAASAA AAAA AAAAA அறிவியல் பாடம் கல்வி ஏற்பாட்டில் இடம் பெற்ற நாள்தொட்டு அப் பாட அறிவை முழுத்திறனுடன் எய்த வேண்டும் என்பதே முதல் கோக்கமாக இருந்தது. தொடக்கத்தில் அப் பாடம் பள்ளிகளில் கற்பிக்கப்பெறுங்கால் செய்திகளே ஐயந்திரியின்றி மாளுக்கர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு கற்பிக்கப் பெற்றது. சிறிது காலமாகத்தான் அறிவியல் விதிகளே உணரும் கோக்கத்துடன் கற்பிக்கப்பெற்று வருகின்றது. இந் நோக்கத்துடன் கற்பிக்கப்பெறும் பாட அறிவு மாளுக்கர்களுக்குப் பயன்படுவதுடன் அதைக்கொண்டு அன்ருட வாழ்க்கையில் நேரிடும் பல பிரச்சினேகளேத் தீர்த்துக்கொள்ளவும் முடிகின்றது. தொடக்கத்திலிருந்து அறிவியல் கற்பித்தலில் மேற்கொண்ட பல முறைகள் நடைமுறையில் இருந்துவருகின்றன. அவை யாவும் பட்டறிவில் வளர்ச்சி பெற்றவை. சில முறைகள் படிப்படியாக வளர்ச்சி புற்றவை ; சில முறைகள் கவனத்துடன் செய்யப்பெற்ற சோதனைகளால் உருவானவை. அந்த முறைகள் யாவும் பாட அறிவை மனத்தில் ஏற்றிக்கொள்வதற்குப் பெரிதும் துனே புரிந்தவை. ஆல்ை, அவை பிற பண்புகளை வளர்க்கச் சிறிதும் துனே செய்யவில்லை என்று எண்ணுவது சரியன்று. தகவல்களைச் சரியாக அறிந்து கொள்வதே முதல் நோக்கமாக இருந்ததால், அந் நோக்கத்தை அவை சரியாக நிறைவேற்றின என்பதற்காகத்தான் இது கூறப்பெற்றது. இவ்வாறு வளர்ந்த ஒரு சில முறைகளே மட்டிலும் ஈண்டுச் சுருக்கமாக ஆராய்வோம் - - 1. விரிவுரை முறை விரிவுரை முறை மிகவும் கவர்ச்சிகரமானது : எளிதாகக் கற்பித்தற்கும் துணே செய்வது. இம் முறை ஆசிரியருக்கும் மாளுக்கருக்கும் தத்தம் முன்னேற்றத்தில் மனநிறைவு தரக்கூடியது. இன்று கல்லூரிகளில் இம்முறை பெரு வழக்காக இருந்து வருகின்றது. இடைக் காலத்தின் தொடக்கத்திலிருந்து இம் முறை கையாள்ப்பட்டு வருகின்றது. தேவையான நூல்கள் இல்லாமையாலும் திறமைசாலி