பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§} அறிவியல் பயிற்றும் முறை விளக்கும் சோதனையை நன்கு செய்ய இயலாது ; பனிக்கட்டி பயன் படும் சோதனைகளையும் நீர்பருகும் பொருள்கள் பயன்படும் . சோதனை களேயும் மஞ்சள் .பாஸ்வரம் பயன்படும் சோதனைகளேயும் மாரிக்காலத் திலும், துரள்பூக்கும் பொருள்கள் பயன்படும் சோதனைகளேக் கோடை யிலும் செய்தல் நன்று. இத்தகைய தகவல்களே கினேவூட்டும் காலக் குறிப்பேடு ஒன்றை ஆசிரியர்கள் ஆயத்தம் செய்துகொண்டால் அ.து அவர்களுக்கு இத்துறைகளில் நினேவூட்டாக அமையும். (12) சோதனைகளேத் தவிர கற்பிக்கும் பாடத்தைப் படங்கள், வரைப் படங்கள், நழுவங்கள், நிழற் படங்கள் முதலியவற்ருலும் விளக்குதல் வேண்டும். - {13} ஆசிரியர் முன்னதாகவே ஆயத்தம் செய்யாவிடில் இம்முறை யில் பாடங் கற்பித்தலில் வெற்றிகாணல் முடியாது. சிறு விவரங் களிலும் நல்ல கவனம் செலுத்துதல்வேண்டும். சோதனேக்குரிய கருவி, பொருள் முதலியவற்றை முன்னதாக நன்கு சோதித்துவிட வேண்டும். முன்னதாகவே ஆசிரியர் தான் காட்டப்போகும் சோதனையைச் செய்து பார்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. சோதனையில் வெற்றி யில்லாவிடில் பாடம் பாழ்தான் ; வேறு முறைகளில்கூட இத்தகைய தோல்வி இராது. (14) சோதனையின் முடிவுகளே முன்னதாக அறிவித்தல் கூடாது : மாணுக்கர்களே கன்கு கவனிக்குமாறு, ஏவி, தாமாகவே சிந்தித்து முடிவு களைக் காணுமாறு அவர்களேத் துரண்டுதல் வேண்டும். (15) பாடநேரம் முழுவதும் சோதனைகள் பரவலாக வருமாறு சோதனைகளே அமைத்துக்கொள்ள வேண்டும். கல்ல முறையில் பாடக் குறிப்புகளே ஆயத்தம் செய்துகொண்டால் அவை பட்டறிவு இல்லாத வருக்கும் துணையாக இருக்கும். - 3. ஆய்வக முறை இம் முறையால் கற்பிக்கும்பொழுது ஆசிரியரின் மேற்பார்வையில் மாளுக்கர்கள் சோதனைகளைத் தாமாகச் செய்வர். ஒவ்வொருவரிடமும் சோதனைகளைச் செய்வதில் கவனிக்க வேண்டிய விதிகளையும் முறை களேயும் விளக்கும் கையேடு (Manual) இருக்கும். மாளுக்கர்கள் அதைப் படித்துத் தத்தமக்கென வரையறுக்கப்பெற்ற சோதனைகளைத் தமக்குரிய இடங்களில் இருந்துகொண்டு செய்வர். விளங்காது விழிக்கும் மாளுக்கர்களுக்கு ஆசிரியர் விளக்கம் தந்து அவர்களேச் செயலில் ஆழ்த் துடுவார் ; சிலரிடம் எழும் ஐயங்களே அவ்வப்பொழுது அகற்றிக்கொள்ளத் துணைசெய்வார். எ ன .ே வ, சோதனைச்சாலை ஆசிரியரும் மானக்கரும் கூட்டாக அறிவியல் பிரச்சினைகளைத் திர்த்துக் கொள்ளும் இடமாக அமைகின்றது. -