பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்- 6; கிறைகள் : இம் முறையில் பல நிறைகள் உள. பாடநூல்களில் கூறப்பெற்றுள்ள செய்திகள் சோதனைகளால் உறுதிப்படுகின்றன : பாடநூல்களில் காணப்பெறும் எடுத்துக்காட்டுகளுடன் தாம் வாழு மிடத்திலுள்ள ஒரு சிலவற்றையும் சோதித்து அறியும் வாய்ப்பினே மாணக்கர் அடைகின்றனர். ஆய்வு கருவிகளேயும் பிற கருவிகளேயும் கல்ல முறையில் கையாளும் திறன்கள் எய்த வாய்ப்புகிடைக்கின்றது. மாளுக்கர் குறுந் துடுப்புகள், பீங்கான் உரல்-உலக்கை, ஊது துருத்தி, மிதி துருத்தி, குறடு, இடுக்கி, தக்கைத் துளைப்பான் போன்ற கருவி களேயும்; தொலேநோக்கி, உருப்பெருக்கி, நிறமாலைமானி போன்ற துணைக்கருவிகளேயும் கையாளும் திறன்கள் எய்தப்பெறுவர். கருவி களேயும் பிற சாதனங்களேயும் பதிவேட்டில் படங்களாக வரைவதால் ஒவியத் திறனையும் அடைகின்றனர். மானுக்கர்களிடம் துணுக்கமான யுக்தியும் விடுப்பூக்கமும் செயற்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. பலருடன் ஒத்து வேலே செய்யும் பயிற்சியினேப் பெற வாய்ப்பு ஏற்படு கின்றது . இஃது அறிவியல் பண்பாடாகும். அபிப்பிராயங்கள் வேறு, மெய்ம்மைகள் வேறு என்பதைப் பிரித்தறியவும், அதுபவத்தில் கொள்கைகளேச் சோதனைகளால் ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பவும் வாய்ப்புகள் நேரிடுகின்றன. கற்றலில் குழந்தைகளே முக்கியம் என்ற கல்வியியலின் உண்மைப்படி மாளுக்கர்கள் கற்றவில் பெரும் பங்கு கொள்கின்றனர். குறைகள் : இம் முறையில் சில குறைகளும் காட்டப்பெறுகின் றன. இம் முறையை மேற்கொள்வதால் பள்ளிக்குப் பெருஞ் செலவு ஏற்படும். தனித்தனியாகச் சோதனைகளேச் செய்வதற்கு அதிகக் காலம் வேண்டியிருப்பதால் குறிப்பிட்ட காலவரையறைக்குள் பாடத் திட்டத்திலுள்ள அனேத்தையும் கற்பிக்க முடிகிறதில்லே. சோம்பல் காரணமாக ஆசிரியரின் மேற்பார்வை தக்க முறையில் நடைபெறவில்லே யாயின் மானுக்கர்கட்குத் தாம் செய்யும் சோதனைகளில் வெறுப்பு ஏற்பட இடம் உண்டு. குறைமதியுள்ளவர் நிறைமதியுள்ளவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்தெழுத வாய்ப்பு ஏற்படுகின்றது. ஒவ்வொரு தடவையிலும் ஆசிரியரின் காலமும் ஆற்றலும் துனேக்கருவி களேயும் பிற பொருள்களையும் சரிபார்ப்பதிலேயே கழிகின்றன. இம் முறையில் உண்மையாகவே பிரச்சினேகள் தீர்க்கப்படுவதில்லே யென்றும், வரைப் படங்களேயும் பிற படங்களையும் வரையும் வேலே அதிகமாக வற்புறுத்தப்பெறுகின்றதென்றும், கல்ல முறையில் உற்று நோக்கலுக்கு வழியேற்படுவதில்லையென்றும் குறை கூறப்படுகின்றது. முடிவு : எண்ணிப் பார்த்தால் இவை யாவும் முறையின் குறை களல்ல என்பது தெரியும். பிற முறைகளுடன் சேர்த்து இம் முறையைக் கையாண்டால் கல்ல பயனக் காணலாம். முறையின்