பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 அறிவியல் பயிற்றும் முறை உண்மைப் போக்கை உணர்ந்தால் இம்முறையின் சிறப்பு தெளிவாகப் புலனுகும். - சில குறிப்புகள் : இம் முறையை மேற்கொள்ளும்பொழுது சில குறிப்புகளை ஆசிரியர்கள் கினேவிலிருத்துதல் வேண்டும். இளம் ஆசிரியர்களுக்குப் பயன்படும் பொருட்டு அவை ஈண்டு தரப்பெறு கின்றன : - (1) சோதனையில் என்ன செய்ய வேண்டுமோ அல்லது எதனே மெய்ப்பிக்க வேண்டுமோ அது மானுக்கர்களுக்குத் தொடக்கத்திலேயே தெளிவாகப் புலனுதல் வேண்டும். மிகச் சிக்கலான சோதனைகளே மாளுக்கர் செய்தல் ஆகாது. . (2) சோதனையின் நோக்கத்தையும் தெளிவாக விளக்குதல் வேண்டும். ர ற்கனவே அறிந்த மெய்ம்மைகளே மானுக்கர்கள் புதிதாகக் கண்டறிவதுதான் நோக்கம் என்று கூ இறுவதால் பயன் ஒன்றும் இல்லே. ஹைட்ரஜன் எரியும்பொழுது என்ன உண்டா கின்றது என்பதைக் கண்டறிதல்', 'தாவரங்கள் சுவாசிக்கின்றனவா என்று காணல் என்ற நோக்கத்தைத் தெரிவிப்பதைவிட ஹைட்ரஜன் எரியும்பொழுது நீர் உண்டாகின்றது எ ன் ப ைத க் காட்டல்”, "தாவரங்கள் சுவாசிக்கின்றன என்பதைக் காட்டல்’ என்று நோக்கத்தைக் கூறுதல் சாலச் சிறந்தது. ஏற்கனவே தெரிந்த ஒன்றைப் புதிதாகக் கண்டறிவதாகக் கூறுதல் அவ்வளவு பொருத்த மாக இல்லே. - (3) சோதனைக் கருவிகளே முதன் முதலாகக் கையாளும் வாய்ப்பு கள் நேரிடும்பொழுது ஆசிரியர் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதுபற்றிய முழு விவரங்களேயும் தெளிவாக அறிவித்தல் வேண்டும். அவற்றைக் கையாள்வதில் மரணுக்கர்கள் விழிப்புடனும் பாதுகாப்புடனுமிருத்தலின் இன்றியமையாமையை வற்புறுத்துதல் நலம் பயக்கும். மாளுக்கர்கள் அவற்றைக் கையாளும் பொழுதும் அவற்றைக் காணும்பொழுதும் அடிக்கடி ஆசிரியர் சரி பார்த்தலும் வேண்டற்பாலது. {4} எந்த அளவு திருத்தமான முடிவுகள் எதிர்பார்க்கப்பெறு கின்றன என்பதையும் மானுக்கர்கள் உணருமாறு செய்தால் நலம் பயக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு திடப்பொருளின் திண்மையைக் கண்டறிய வேண்டுமானுல் அதன் கன அளவு, எடை ஆகிய இரண்டு அளவைகள் வேண்டும். அந்த இரண்டு அளவைகளில் கன அளவைக் காண்பதில் எடை காண்ப திலுள்ளதைவிட அதிக 媛郡链” தவறுகள் விளேயும். எனவே, எடை காண்பதில் அதிகக் கவனம் செலுத்தி, சரியான எடையைக் காணவேண்டும் என்று முயல்வதில் பயன் ஒன்றும் இல்லை. இறுதி விடையில் 5-இலிருந்து