பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அறிவியல் பயிற்றும் முறை செய்வர். பலர் கண்ட அளவைகளை அல்லது முடிவுகளே ஒன்று சேர்த்து அறியவேண்டிய தகவலே அறியலாம். ஒருவர் பிறருடைய தகவலே எதிர்பார்க்கும் நிலை ஏற்படுவதால், மாணவரிடையே ஒருவிதப் பொறுப்புணர்ச்சி வளர இடம் ஏற்படுகின்றது. - செய்து காட்டல் முறைக்கும் ஆய்வக முறைக்கும் உள்ள வேற்றுமை கள் : செய்து காட்டல் முறையையும் ஆய்வக முறையையும் மேற் கொண்டு கற்பித்த ஆசிரியர்கள் இரண்டு முறைகளிலும் நல்ல பலனைக் கண்டுள்ளனர். செய்துகாட்டல் முறையில் மீதமான காலத்தை மாளுக்கர்களுக்குப் பன்முகப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தினுல் நிறைந்த பலனைக் காணலாம். இரண்டு முறைகளுக்குமுள்ள ஒரு சில வேற்றுமைகளை ஈண்டுக் குறிப்பிடுவோம் : செய்து காட்டல் முறை ஆய்வக முறை 1. காலச் சிக்கனம் ஏற். கற்பித்தலுக்கு அதிகக் காலம் படுகின்றது. ஆய்வக முறையி தேவைப்படுகின்றது. லாகும் காலத்தில் பாதிநேரம் இதற்குப் போதுமானது. 2. செலவினங்கள் குறை செலவினங்கள் மிகும். யும். 3. சோதனைகளின் தொடக் துணைக்கருவிகளைக் கையாளும் கத்தில் பல திறன்கள் உற்று முறையை அறியாத மாளுக்கர் நோக்கலால் ஏற்படுகின்றன. கள், செய்யும் வேலையில் உற்சா கத்தை இழக்கக்கூடும். 4. இம்முறையை மேற் ஆய்வகத்திற்கு வேண்டிய கொள்ளும் ஆசிரியர் மாளுக்கர் திறன்களே அடைவதற்கு அதிக களைக் குழுக்களாகச் சோதனை வாய்ப்புகளே நல்குகின்றது. களைச் செய்யச் செய்தால் நிறைந்த - பலனே எதிர்பார்க்கலாம், முடிவு : இரண்டும் சிறந்த முறைகள்தாம். நமது நாட்டைப் பொருத்தவரையில், பணம் இல்லாக் காரணத்தால், செய்து காட்டல் முறையே நடைமுறையில் எளிதில் மேற்கொள்ளக் கூடியதாகும். எனினும், கலந்தாய்த ல், செய்து காட்டல், சோதனைகளைத் தாமாகச் செய்த்ல் ஆகிய மூன்றும் கலந்த கலவை முறைதான் கடை" முறையில் சிறந்த கன்மை பயக்கும்.