பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கழகங்களோ வெளியிட்டு,அவற்றின் துணைக்கொண்டு செயலில் இறங்க லாம். நாளடைவில் பல குழுக்களே நிறுவி, நூல்கள் எழுதியவர்களேயும் குழுவில் உறுப்பினர்களாகச்செய்து, கலைச்சொற்களே அறுதியிடுவதில் வெற்றியும் பெறலாம். இவ்வாறு திட்டமிட்டுப் பணியாற்றில்ைதான் அனைத்தும் விரைவாகவும் திறனுடனும் சீர்பட்டு நடைமுறைக்கு வரும். இந்நூல் அறிவியல் பயிற்றும் முறையைக் கூறுவது. சென்ற பிப்ரவரித் திங்களில் (1956) நடைபெற்ற சென்னைப் பல்கலைக் கழகக் கல்வி ஆலோசனைக் குழு (Academic Council) வின் கூட்டத்தில் பி. டி. தேர்வுக்குரிய விருப்பப் பாடங்களேத் தாய் மொழியில் கற்பிக்க லாம் என்று தீர்மானிக்கப் பெற்றது. அந்தத் தீர்மானத்தையொட்டி நடைமுறையாண்டில் சில பயிற்சிக் கல்லூரிகளில் விருப்பப் பாடங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்பெற்று வருகின்றன. அக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாளுக்கர்கட்குப் பயன்படலாம் என்றும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலுள்ளவர்கட்கும் மேற்கோள் நூலாக உதவக் கூடும் என்றும் நம்பியே இந்நூலே எழுதத் துணிந்தேன். எழுதி முடிப்பதற்கு எட்டுத் திங்கள்கள் ஆயின. பயிற்சிக் கல்லூரி மாளுக்கர்கட்குப் பயன்படும் நீலேயில் அறிவியல் பயிற்றும் முறை பற்றித் தமிழில் எழுதப்பெற்று வெளியிடப்பெறும் முதல் நூல் இதுவேயாகும். - ஒன்பது ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியனுக இருந்தபொழுது அறிவியல் பாடத்தை எல்லா வகுப்புகட்கும் கற்பித்த அநுபவத்தைக் கொண்டும், நேரில் அறிந்த பல செய்திகளைக் கொண்டும், ஏழு ஆண்டுகள் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற நேரது பவத்தைக் கொண்டும், இந்நூல் ஆக்கப் பெற்றுள்ளது. இதில் குறிப் பிடப்பெற்றுள்ள பல்வேறு செய்திகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் அன்று. அனேத்தும் நட்ைமுறையில் மேற்கொள்ளக் கூடியவை: அநுபவத்தால் அறிந்தவை. . . - நூல் பதினேந்து இயல்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. முதல் இயலில் பள்ளிகளில் அறிவியல் பயிற்ற வேண்டிய இன்றியமையாமை யும், இரண்டாம் இயலில் அது பயிற்றப்பெறுவதன் நோக்கங்களும் ஆராயப்பெற்றுள்ளன. மூன்ருவது, நான்காவது இயல்களில் முறையே அறிவியல் பாடத்திற்குரிய பொருள் அறுதியீடு, அறுதியிடப் பெற்றவற்றைப் பல்வேறு முறையில் பாடத்திட்டமாக அமைத்தல் ஆகியவை கூறப்பெற்றுள்ளன. ஐந்தாவது இயலில் அறிவியல் பாடத் திற்கே சிறப்பானதும், அறிவியல் துறையிலிருந்தே தோன்றியது மான அறிவியல் முறை பற்றி விரிவாக விளக்கப்பெற்றுள்ளது. ஆருவது, ஏழாவது இயல்களில் அறிவியல் பயிற்றுவதற்கு மேற் கொள்ளப்பெறும் பல்வேறு முறைகள் சுருக்கமாகக் கூறப் பெற்றுள்ளன. ஒன்பதாவது, பத்தாவது இயல்களில் முறையே