பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்-1 65 SAMSMMAMMAMAMSMAMMMMAMMAAASA SAASAASAASAASAAMAMASAMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS 4. பாடநூல் முறை நீண்ட காலமாகவே கற்பதில் பாடநூல் பெருவழக்கில் பயின்று வந்துள்ளது. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் பாடநூல், கற்கும் ஒரு முறையாகக் கையாளப்பட்டு வருவதைக் காணலாம். இம் முறைப்படி நூலிலுள்ள செய்திகளே மானுக்கர்கள் படித்து அவற்றை ஆசிரியரிடம் திரும்பக் கூறுவர். நூலிலுள்ளவை அனைத்தும் மாற்ற முடியாத மெய்ம்மைகளாகக் கருதப்பெறும். பாடநூல் முறையில் குறைகள் தெளிவாகப் புலயிைனும், அறிவியல் கற்றலில் பாடநூலேப் பயன்படுத்தும் வழக்கம் எதிர்காலத்தில் இருக்கத்தான் செய்யும் : அதை அறவே நீக்க முடியாது. - பயன்கள் : சரியான முறையில் கையாண்டால், அறிவியல் கற்பதில் பாடநூல் ஒரு முக்கிய சாதனமாகத் திகழும். செய்திகளே அறிவதற்குப் பாடநூல் ஒன்றுதான் மூலம் என்ற வழக்கம் இருந்தால், மானுக்கர்களுக்குத் தவருன கருத்து ஏற்படக்கூடும் ; அதன் உண்மையான மதிப்பு சரியான முறையில் அமையாமல் போகவும் கூடும். ஒரே நூலேப் பயன்படுத்துவதைவிட, பல்வேறு நூல்களேம் பார்க்கும் பழக்கத்தை உண்டாக்கிவிட்டால் மாளுக்கர்கள் பல்வேறு மூலங்களிலிருந்தும் செய்திகளேயறியும் வழியைக் கண்டறிவர் : இதல்ை பல் பிரச்சினைகளேத் தீர்த்துக்கொள்ளும் முறைகளையும் தெரிந்துகொள்வர். இத் திட்டம் மாளுக்கரிடையே நல்ல படிக்கும் பழக்கங்களே வளர்க்கவும் செய்யும். அண்மைக் காலத்தில் பல்வேறு அறிவியல் துறைகளைப்பற்றியும் i i όλ} நூ ல் க ள் வெளியிடப்பெற்றுள்ளன. அவற்றில் H. st; பிரச்சினேகளும் செயல் முறைகளும் காட்டப்பெற்றுள்ளன. அதே பிரச்சினேகளேத் தீர்க்கும் வழிகளைக் காட்டும் வேறு நூல்களும் மேற் கோள்களாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. இம்மாதிரி ஒரே நூலே கடு நாயகமாகக்கொண்டு, பல்வேறு நூல்களைக் கற்பதில் துணியாக அமைத்துக்கொள்ளலாம். இத்தகைய நூல்கள் தமிழில் இன்னும் தோன்றவில்லே. நூல்களிலிருந்து செய்திகளேத் திரட்டிக் கோவைப் படுத்துவதே ஒரு தனிக் கலையாகும். 5. வளர்ச்சி முறை இது ஒரு விதிவரு முறையாகும். ஒரு பிரச்சினேயை எடுத்துக்கொண்டு வகுப்பு மாளுக்கர்கள் அனேவரும் சேர்ந்து இதனே ஆராய்ந்து ஒரு முடிவு காண்பர். ஆசிரியர் இடை இடையே விடுக்கும் விளுக்கள் இதற்குத் துணே புரியும் தேவையாக இருக்கும்பொழுது அவர் சோதனைகளேயும் செய்து காட்டுவார். இவ்வாறு ஆசிரியரின் அ.ப.மு-5