பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அறிவியல் பயிற்றும் முறை ஒரு கல. இன்றைய அறிவியல் பாடத்தில் இப் பண்புகள் சரியாகக் காட்டப்பெறுவதில்லே. பாடத்திட்டத்தில் இத்தகைய பண்புகளைக் காட்டும் நிகழ்ச்சிகள் சேர்க்கப்பெறுதல் வேண்டும். வரலாற்று முறையில் கற்பித்தால் இத்தகைய வாய்ப்புகள் உண்டாகும். கருதுகோள்களிலிருந்து மனிதன் எடுத்த முயற்சிகளைக் கண்டு நவின ஆராய்ச்சி முறைகள் வரை அவன் சாதித்த செயல்களை வரலாற்று முறையில் வைத்துக் கற்பிக்கப்பெற்ருல் அவற்றை மாளுக்கர் ஆர்வத்துடன் பயில்வர். அவர்களின் கற்பனைத்திறனும் சிந்தன ஆற்றலும் விரிவடையும். வேதியியல், வான நூல், தரையியல்: பெளதிக இயல் போன்ற துறைகளில் சில பகுதிகளே இம் முறையில் கற்பிக்கலாம். பல நூற்ருண்டுகளாக அறிவியல் கொள்கைகள் என்வாறு மாறுபட்டுள்ளன என்பதையும், ஒரு கொள்கை பிறிதொன்ருல் எங்கனம் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து, முதன் முதலாகக் கற்கும் மாளுக்கன் மிக அண்மையில் கண்டறியப் பட்ட கொள்கையும் கிரந்தரமான உண்மையன்று என்ற கம்பிக்கை கொள்ள முடியும். அப்பொழுதுதான் அவனுக்கு அறிவியல் மனப்பான்மை ஏற்படும். இதுகாறும் பள்ளி அறிவியல் பாடத் திட்டங்களிலோ பாடநூல்களிலோ இம் முறை சரியான நெறியில் கையாளப்பெறவில்லை. - அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையில் நேரிட்ட சில கவர்ச்சிகர மான நிகழ்ச்சிகள், சில கண்டுபிடிப்புகளில் நேரிட்ட விசித்திரமான சம்பவங்கள் ஆகியவற்றைக் காரண காரிய முறையில் அமைத்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கலாம். இதனுல் நிறைந்த பயன் உண்டாகும் . இது கற்போரின் அறிவுப் பசிக்கு நல்ல விருந்தாக அமையக்கூடும். ஒரு சில அறிஞர்களின் சேவையால்தான் அறிவியல் கலே வளர்ந்துள்ளது என்ற மெய்ம்மையையும் அறியலாம். அவர்களே வெற்றிப்பாதையில் கொண்டுசெலுத்திய அரிய பண்புகள் யாவை என்பதையும் அவர்கள் சிந்திக்க இங்கு இடம் உண்டு. சில ஆசிரியர்களின் மனத்தைச் சிறந்த அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் கவர்க்துள்ளன ; அவ்வறிஞர்களின் அருஞ் செயல்கள் அவர்களது சிந்தனையைக் கிளறியுள்ளன. அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையையும் சேவையையும் அமைத்து மனநிறைவு பெறும் முறையில் ஒரு பாடத்திட்டத்தை வகுத்துக்கொண்டு கற்பிக்கலாம் என்று அந்த ஆசிரியர்கள் கருதுகின்றனர். எடுத்துக் காட்டுகளாக, காயர்னிகஸ், கலிலியோ, ஐசாக் கியூட்டன், கில்பர்ட், ஹார்வி, பாயில், பிரிஸ்டிலி, லெவாய்லர், டேவி, ஃபாரடே, பாஸ்டர், லிஸ்டர் ஆகியோர்கள் கண்ட அருஞ்செயல்களின் வரலாறுகளே நடுவாக அமைத்துக்கொண்டு பாடத்திட்டங்களே வகுக்கலாம். இந்தச் செய்தி களே காங்கப் பாணியுடன் எடுத்து விளக்கினால் அவை மாளுக்கரின் ..., & န္တြင္လို႕