பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்-; §3 د سي سيnwني சிந்தையைக் கவர்ந்து கற்பதில் ஆர்வத்தை எழுப்பும். ஒவ்வொரு ஆசிரியரும் தாம் கற்பிக்கும் பாடங்களில் அடிக்கடி இத்தகைய நிகழ்ச்சிகளைக் கலந்து கற்பிக்க வேண்டும். படிவளர்ச்சிப் பாணியை அ ைமத் து ம் இம்முறையைக் கையாளலாம். அறிவியலில் சில பகுதிகள் வளர்ந்த வரலாற்றை இம் முறையில் அமைத்துக் காட்டலாம். இம் முறை கால ஒழுங்கை வற்புறுத்துகின்றது. இதல்ை அவ்வக்கால அறிவுநிலைக் கேற்றவாறு கொள்கைகள் தோன்றினமையும், புதிய கருத்துகள் வெளியானமை யும், பழங்கொள்கைகள் நீக்கப்பட்டமையும் தெளிவாகின்றன. பயன்கள் : இம் முறையால் கிடைக்கும் கல்விப் பயன் மிகவும் பெரிது. சோதனைகளின் விளைவுகளைக் கொள்கைகளின் முன்னர் வைத்து ஒப்பிட்டுப் பார்க்காததால் எவ்வாறு முன்னேற்றம் தடைப் பட்டது என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது. பழங்கொள்கை கள் யாவும் தவறு என்ற கருத்தையும், புதிய கொள்கைகள் யாவும் சரி என்ற எண்ணத்தையும் மனத்திலிருந்து அகற்றத் துனே செய்கின்றது. ஆனால், பல பகுதிகளே இம் முறையில் கற்பிக்க முடியாது. எரிதல், கரைசல்பற்றிய கொள்கைகள் போன்ற ஒரு சிலவற்றையே இம் முறையில் அமைத்துக் கற்பிக்கலாம். சமூக முறையிலும் வரலாற்று முறையை அமைத்துக் கொள்ள முடியும். அறிவியல் சமூகத்தின் முயற்சியே என்பதை விளக்கும் வகையில் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். இம் முயற்சியால் சமுதாயமே மாறி அமைகின்றது என்பதை உணர்த்தலாம். நாட்டில் வாழும் ஒவ்வொருவருடைய அவசரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எவ்வாறு அறிவியல் அறிஞர்கள் பங்கு கொண்டுள்ளனர் என்பதையும், 'அறிவே ஆற்றல்’ என்ற பழமொழிக் கிணங்க, புதிதாகக் கண்டறியும் அறிவால் பெறும் ஆற்றலே (எ-டு அணுவின் ஆற்றல்) கன்முறையில் பயன்படுத்தினுல் எவ்வாறு மனித நலத்தை உயர்த்தலாம் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டலாம். இம் முறையை அனுசரித்து ஒரு சில நூல்களும் வெளிவந்துள்ளன. பள்ளிப் பாடத்திட்டங்கள் நாளடைவில் இம் முறையையொட்டி மாறுபடலாம். ஆனால், அதல்ை பெறும் பயனே பெரிதன்று. இம் முறையில் கற்பிக்கும்பொழுது குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை : வளர்ந்தவர்களுக்கு இம் முறை ஒருவாறு நன்கு பயன்படக்கூடும். 1. Prof. Hogben : Mathematics for the Miłłico and Science for the Çitizen.