பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ግፏ அறிவியல் பயிற்றும் முறை இருந்து சோதனைகளால் காண முனைவது ஒரு பெரிய பித்தலாட்டம் : தாமாக அதைக் கண்டறிகின்றனர் என்று அவர்களே எண்ணச் செய்வதும் அவர்களுக்குத் திங்கு விளைவிப்பதாகும். எல்லாவற்றை யும்விட அறிவுத் துறையில் மிகவும் வேண்டப்படுவது நாணயமே (Honesty); யோக்கியதையே. மாற்றியமைக்கப்பட்ட முறை : மேற்கூறியவாறு பல குறைகள் இருப்பினும், அவற்றை ஓரளவு நீக்கி நடைமுறைக்கேற்றவாறு இம் முறையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதைச் சிறிது காண்போம்: - (1) கற்பித்தலைப் பிரச்சினேப் பாங்குடன் (Problematic) அமைக்கவேண்டும். முதன் முதலாக் கண்டறிந்த அறிவியலறிஞன் எத்தனேயே பிரச்சினைகளில் பங்கு கொண்டிருந்திருக்கலாம் ; எனவே, ஆசிரியர் மாணுக்கர் விரும்பி ஏற்கும் பிரச்சினைகளே மட்டிலும் தேர்ந் தெடுக்கும் வாய்ப்பினை நல்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்பெற்ற வினுக்களைக்கொண்டு பிரச்சினேக&ாத் தீர்க்கும் வழிகளில் அவர்களேக் கொண்டுசெலுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக பூச்சிகளால் மகரந்தக் கலப்பு நடைபெறும் பூக்களைப்பற்றிய பாடத்தில் பாடநோக்கத்தை ஒரு பிரச்சினே போல் கூறலாம். இன்று சில பூக்களைச் சோதித்து, அவற்றில் எவ்வாறு யாவரால் மகரந்தக் கலப்பு நடைபெறுகின்றது என்பதைக் காண்போம்” என்று கூறிக் குழந்தைகளிடம் கவர்ச்சியை உண்டாக்கி விடுப்பூக்கத்தைத் தூண்டலாம் : குழந்தைகளும் தாமாகக் கண்டறிவதில் முயற்சி எடுப்பர். (2) பாடத்தைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னர் மாணுக்கர் கள் பாட நோக்கத்தை நன்கு அறிதல் வேண்டும். ஒரு பிரச்சினையை எடுத்துக்கொள்ளும்பொழுது, அதை ஆசிரியர் நன்கு சிக்கறுத்து. மாளுக்கர்கட்கு அதன் நோக்கத்தைத் தெளிவாக்குதல் வேண்டும். தமக்குத் தெளிவாக இருப்பது போலவே, மாளுக்கர்கட்கும் தெளிவாக இருக்கும் என்று ஆசிரியர் தவருகக் கருதி நோக்கத்தைத் தெளிவாக்க மறந்துவிடுதல் கூடாது. (3) இயன்றவரை விரிவுரை முறையை ஆசிரியர் தவிர்த்தல் வேண்டும். சரியான உற்றுநோக்கல், மெய்ம்மைகளைச் சேகரித்தல், தாமாகக் கண்டறிதல் ஆகியவற்றை மானக்கர்களிடம் தோன்ற ஆசிரியர் வகுப்பில் வாய்ப்புகளே நல்கவேண்டும். சோதனைகளைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் வாய்மொழியால் கலந்து ஆய்ந்து (Oral discussion) அதன் மூலம் துனேக்கருவிகளே அமைக்கும் முறை, அதில் நேரிடக்கூடிய ஒரு சில தவறுகள், சோதனையைச் செய்யும் முறை முதலியவைபற்றிய விவரங்களே மாளுக்கர்களிடமிருந்தே வருவித்தல் வேண்டும், -