பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ić, ஆய்வகம் அமைத்தல், ஆய்வகத்துள்ள துணைக்கருவிகள், துண்க கருவிகளேப் பாதுகாக்கும் முறைகள் ஆகியவை விளக்கமாகக் கூறப் பெற்றுள்ளன. பதினென்ருவது, பன்னிரண்டாவது இயல்களில் அறிவியல் பாடத்தைச் சுவையுடன் பயிற்றும் வழிகளும் சாதனங்களும் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. பதின்மூன்ருவது இயல் அறிவியலேப் பிற பாடங்களுடன் பொருத்திப் பயிற்றலே விளக்குகின்றது. பதின்ைகாவது இயல் அறிவியல் பாடத்தில் மேற்கொள்ளப் பெறும் பழைய முறை - புதிய முறைத்தேர்வுகளே எடுத்துரைக் கின்றது. பதினேந்தாவது இயலில் அறிவியல் ஆசிரியர்கட்குத் தேவையான நடைமுறைக் குறிப்புக்கள் தரப்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் நூலில் மேற்கொள்ளப்பெற்றுள்ள கலச் சொற்கள், மேற்கோள் நூல்களின் பட்டியல் பொருட்குறிப்பு அகராதி மாதிரிப் பாடக்குறிப்புக்கள் ஆகியவை பின்னிணேப்புக்களாக அமைந்துள்ளன. கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் படிக்கும் முறை கள் பற்றிய பல்வேறு கருத்துக்களேத் தமிழில் அமைத்துக் கோடலுக்கும் மேற்கோள் நூல்கள் இந்நூலைப் படிப்போரை மேலும் படிப்பில் ஊக்குவதற்கும், பொருட்குறிப்பு அகராதி, பல செய்திகளே விரும்பியவாறு தொகுத்தறிவதற்கும், மாதிரிப் பாடக் குறிப்புக்கள்’ பயிற்சிக் கல்லூரி, பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் பயிற்சி பெறும் இளம் ஆசிரியர்கட்குத் துணையாக இருப்பதற்கும் எ ன் .ே ற சேர்க்கப் பெற்றுள்ளன. 1938-இலும் 1947-இலும் அரசினரால் வெளி பிடப்பெற்றுள்ள கலைச்சொற்கள் அப்படியே எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன. சில புதிய சொற்கள் ஆக்கப்பெற்றும் மேற்கொள்ளப் பெற்றுமுள்ளன. இச்சொற்கள் யாவும் சரியான முறையில் ஒரு கிலே யாக்கப் பெற்றுள்ளன என்று சொல்வதற்கில்லே. நடைமுறையில் இவை இன்னும் திருத்தம் பெற வேண்டியவை. அடுத்த பதிப்பில் இவை இன்னும் நன்கு சீர்பெறும். - - - \ இன்று பள்ளிகளில் பெரும்பாலும் பாட நூல்களின் துணைக் கொண்டே அறிவியல் கற்பிக்கப்பெறுகின்றது. மாளுக்கர்களேத் தலைக்கு ஒரு பத்தியாகப் படிக்கச் சொல்லி, அதிலுள்ள பொருள் விளக்கப்பெறுகின்றது. பள்ளிகளில் துனேக்கருவிகள் மனநிறைவு கொள்ளும் வகையில் இல்லை; அவை இருந்தாலும் ஆசிரியர்கள் அவற்றைக் கையாளுவதும் இல்லை. பாட நூல், சீமைச் சுண்ணும்புக் கட்டி, கரும்பலகை ஆகிய மூன்றைக்கொண்டே - சில சமயம் பின் னிரண்டும் இல்லாமலேயே-சகல காரியங்களேயும்’ ஆசிரியர்கள் முடித்து விடுகின்றனர்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழ மொழிக் கிணங்க இந்நூலில் கூறப்பெற்றுள்ள சில வழிகளே அறிவியல் பயிற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டால் மாளுக்கர்கள் அறிவியலே உற்சாகமாகக் கற்பதுடன், அவர்களிடம் இக்காலத்தில் மிகவும் வேண்டப் பெறும் அறிவியல் மனப்பான்மை"யும் அமையும்.