பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ہیں-عے (4) ஆசிரியருக்கும் மாளுக்கருக்கும் இடையேயுள்ள தொடர்பு சரியான நிலையில் இருக்க வேண்டும். ஆசிரியர் அதிகமாகவும் உதவி செய்தல் கூடாது ; உதவி செய்யாமலும் இருத்தல் ஆகாது ; கற்பித் தலில் இருவரிடையேயும் சதா தொடர்பு இருந்துகொண்டிருத்தல் வேண்டும். குழந்தைகள் தாமாகவே முடிவு காணும் வாய்ப்புகளேப் பெற்ருல், கற்றலில் நல்ல வெற்றி காணலாம் ; காணமுடியும். முடிவு : தாமாகக் கண்டறியும் முறையில் குறைகள் இருப்பினும், தாமாகக் கண்டறியும் மனப்பான்மை அறிவியல் துறைக்கு மிகவும் வேண்டப்படுவதொன்று. பள்ளி வாழ்வில் இம் மனப்பான்மையை மாளுக்கர்களிடம் உண்டாக்க ஆசிரியர் தம்மாலாவனவற்றையெல்லாம் செய்தல் வேண்டும். நல்ல வினுக்களே விடுக்கும் திறன் கைவரப் பெற்ற ஆசிரியர்களாக இருந்தால், கீழ் வகுப்புகளிலும் இம் மனப் பான்மையை உண்டாக்க முடியும். எடுத்துக்காட்டுகளாக"வண்ணுத்திப் பூச்சி, கொசு, தவளை போன்றவற்றின் வாழ்க்கை வரலாற்றைக் கற்பிக்கும்பொழுது இதை நன்கு எய்துவிக்கலாம். கீழ் வகுப்பு களில் சில பகுதிகளேயாயினும் இம்முறையில் கற்பித்தல் சாலப் பயன் தரும். 2. பிரச்சினை முறை பிரச்சினே முறை தாமாகக் கண்டறியும் முறையிலிருந்து தோன்றியது என்று கருதலாம். வகுப்பறையில் நடத்தப்பெற்ற ஆராய்ச்சியின் விளைவாக மாளுக்கர் மனத்தில் தானகப் பிரச்சினே எழவேண்டும் என்பது இம் முறையின் குறிக்கோளாகும். இவ்வாறு பிரச்சினை எழாவிடில் மாளுக்கர்களிடம் ஒரு பிரச்சினே அல்லது ஒரே பாடத்தில் பல பிரச்சினைகளை எழுப்புவதற்கு வழி கோலலாம். கரும் பலகையின் துணைக்கொண்டு அவர்களிடம் பல பிரச்சினைகள் தோன்றச் செய்யலாம். - இம் முறையில், தாமாகக் கண்டறியும் முறை போலல்லாது, தேவையானபொழுது ஆசிரியர் மாளுக்கர்களுக்குக் குறிப்புகளைத் தருவார். வகுப்பில் மாளுக்கர்கள் தனித்தனியாகவோ குழுக்களா கவோ இருந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பர். சோதனைகளைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க நேரிடுங்கால், ஆசிரியர் சரியான வினுக்களே விடுத்துத் தேவையான துணைக்கருவிகள், அவற்றைக் கையாளும் முறைகள் முதலியவற்றை மாணுக்கரிடமிருந்தே வருவிக் கலாம். இதற்கென அச்சிடப்பெற்ற கையேடுகளைக்கொண்டு இம் முறையை மேற்கொள்ளலாம். அவ்வேடுகளில் பல பிரச்சினேகள் காட்டப்பெற்றிருக்கும். ஒவ்வொன்றின் கீழும் அவற்றைத் திர்க்கும் குறிப்புகள், வழிகள் முதலியவை காணப்படும். எழுதுவதற்கும்