பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - அறிவியல் பயிற்றும் முறை கும். பள்ளி நூலகம் பாடங்களேயொட்டிப் பிரிவினை செய்யப்பெற்று நல்ல சூழ்நிலையைக் கொண்டிருக்கும். ஆசிரியர் கல்லாலின் புடை யமர்ந்த தென்முகக் கடவுள் போல் வீற்றிருந்து மாளுக்கர்களிடையே எழும் ஐயங்களே அவ்வப்பொழுது அகற்றி கன்முறையில் கற்றலில் கொண்டுசெலுத்துவார். ஒப்படைப்புகள் : ஒவ்வொரு பாட அறையும் (ஆய்வகம்) அவ்வப் பாட வல்லுநரின் ஆட்சியிலிருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் பல நிலைத் தேர்ச்சியுள்ள மாளுக்கர்கள் இருந்து தாமாகவே படிப்பர். கல்வி ஏற்பாடு ஒவ்வொரு ஆண்டிற்கும் இவ்வளவு என்று சில பகுதிகளாகப் (jobs) பிரிவு செய்யப்பெற்று இருக்கும் : அப்பகுதிகள் மாதாந்திர ஒப்பந்தங்களாக (Assignments) வகுக்கப்பெறும் ; அவை மீண்டும் வார ஒப்படைப்புகளாகவும் (Blocks or Periods) அன்ரு ஒப்படைப்பு களாகவும் (Units) பிரிவினை செய்யப்பெறும். ஒவ்வொரு மாணுக் கனும் ஒரு பள்ளியாண்டில் இத்தனை ஒப்படைப்புகள் செய்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதால் அஃது இப்பெயர் பெற்றது. ஒப்படைப்புகளே இம்முறையின் உயிர்காடியாகும். ஒரு பள்ளியாண்டில் எத்தனே மாதங்கள் உள்ளனவோ அத்தனை ஒப்படைப்பு கள் ஒரு பாடத்திற்கு உண்டு. ஒன்பது மாதங்கள் கொண்ட ஒரு பள்ளியாண்டில் அறிவியல் பாடத்திற்கு மட்டிலும் ஒன்பது ஒப்படைப்பு கள் தர வேண்டியிருக்கும். . மாளுக்கர் பயிலும் முறை : மாளுக்கர்கள் தத்தம் விரைவுக்கேற்ற வாறு பாடங்களைப் பயிலலாம். தத்தம் விருப்புத்திற்குகந்த பாடங் களே விருப்பப்படி கற்கலாம். ஒப்படைப்புகளைப் பயிலும் நேரத்தில் மாளுக்கர்கள் ஆசிரியரை அண்மி உசாவலாம் : பிற மாளுக்கர்களிடமும் தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம். கன்னூலார் கூறும், நூல்பயில் இயல்பே துவலின்வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை கினைத்தல் ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையார் தம்மொடு பயிறல் விளுதல் வினுயலை விடுத்தல் ' என்ற வாய்ப்புகள் யாவும் இங்கு பெற வசதிகள் உண்டு. எப்பாடங் களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டுமோ, அப்பாடங்களில் அதிகக் கவனம் செலுத்தலாம். ஆசிரியர் மாளுக்கர்களின் வேலையில் அடிக்கடி குறுக்கிடாது ஒரு மேற்பார்வையாளர் போல் இருந்து மாளுக்கர்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஈந்து கற்கும் சூழ்கிலே கெடாதவாறு பார்த்துக் கொள்வார்; அவ்வப்பொழுது தேர்ச்சிப்பதிவுத் தாள்களில் மாளுக்கர் கள் ஒப்படைப்புகளைப் பெற்ற நாள், அவற்றை அவர்கள் செய்து முடித்த நாள், வேலையின் தகுதி முதலியவற்றைக் குறித்து வைப்பார். 1. தன்னுரல்-நூற்பன. 41 . - 。