பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-2 73 அத்தாள்களின் ஒரு படி மாளுக்கர்களிடமும் இருக்கும்; அவ்வாறு இருந்தால்தான் மானுக்கர்களுக்கும் தத்தம் உண்மை நிலையை அடிக்கடித் தெரிந்து கொள்ள வசதி ஏற்படும். கிறைகள் : உண்மையான உரிமை மாளுக்கர்களுக்குக் கொடுக்கப் பெறுவதால், தத்தம் விருப்பப்படி அவர்கள் எந்த நேரத்திலும் விரை வாகவோ மெதுவாகவோ கற்கலாம் : பாடவேளைப் பட்டியின் கட்டுப் பாடு அவர்களுக்கு இல்லே. பாடங்கள் தம் நன்மைக்காகவே ஏற்பட்டவை என்று அவர்கள் உணரமுடிகின்றது. இதனால் பாடத்தில் பற்றும் கவர்ச்சியும் ஏற்பட்டு அவர்களிடம் தன்னம்பிக்கையும் பொறுப் புணர்ச்சியும் வளர்கின்றன. கற்றல் திறமையாக நடைபெற்று அதில் நல்ல முன்னேற்றத்தையும் காண முடிகின்றது. குறைமதியினரும் நிறைமதியினரும் விருப்பம் போல் கற்க முடிகின்றது. சரியான முறையில் பாடநூல்கள், மேற்கோள் நூல்கள், தகவில் துரல்கள் முதலியவற்றைப் பயன்படுத்தும் வழிகளே மாளுக்கர்கள் அறிந்து கொள்கின்றனர். நன்னூலார் கூறும், அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும் ' என்ற நூற்பாவின்படி மாளுக்கர்கள் கல்ல விளக்கம் அடைகின்றனர். ஆசிரியருக்கும் தம் வேலேயின் பொறுப்பையுணர்ந்து திட்டம் வகுத்துக் கொள்ள வாய்ப்பினே கல்குகின்றது. - குறைகள் : இம்முறையில் சில குறைகளும் காட்டப்பெறு கின்றன. மாளுக்கர்களின் வேலேக்கு மதிப்பெண்கள் தருவது கடினம். இம்முறை அச்சு நூல்களின் இன்றியமையாத் தன்மையைத் தவருன முறையில் வற்புறுத்துகின்றது. ஆசிரியருக்கு வேலே அதிகம். சிறு வயதிலேயே மானுக்கர்களிடம் அதிகப் பொறுப்பைத் தருகின்றது. பொருட்செலவும் காலச்செலவும் மிகுதி. இவை யாவும் முறையின் குறைகள் அல்ல. எனவே, அவை கொள்ளத் தக்கவை அல்ல. 4. தன்ளுேக்க முயற்சி முறை தன்னுேக்க முயற்சி முறை என்பது செய்து கற்றலாகும். இம் முறையை முதன் மு. த லா க க் கையாண்டவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஸ்டீவென்சன் என்பார். 1908-ஆம் ஆண்டில் மாசசூசட்ஸ் என்ற இடத்தில் தொழிற் பள்ளியில் வேளாண்மைக் கல்வியில் இது பயன்படுத்தப்பெற்றது. முதன் முதலாக உயர்கிலேப் பள்ளியில் வேளாண்மைப் பாடத்தைக் கற்பிக்க நேரிட்டபொழுது பயிர் களுடன் கூடிய பண்ணேயொன்றை மானுக்கர்களுக்குக் காட்ட 1. நன்னுரல்-நூற்பா 45.