பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-2 3? -- செயல் முறையில் உள்ளது பின்னதன் முடிவு ஆராய்ந்து கானும் கிலேயில் உள்ளது. எனவே, பிரச்சினே முறையிலிருந்து காரணகாரியத் தொடர்புடன் தன்னேக்கமுயற்சி முறை தோன்றியது என்று கூறலாம். மேற்கொள்ளும் வழி : தன்னேக்க முயற்சி வேலையைத் தனித் தனியாகவும் மேற்கொள்ளலாம் : குழுவாகவும் எடுத்துக்கொண்டு செய்யலாம். குழுவாகச் செய்யும்பொழுது குழுவிலுள்ளோர் அனேவரும் ஒரு பிரச்சினையில் ஈடுபடுவர் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் பிரச்சினையின் திட்டமான ஒவ்வொரு கூற்றிலும் பொறுப்பேற்றுச் செய்வர். ஆனால், மேற்கொண்ட வேலையை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு குழுவினயே சாரும். - தன்னேக்க முயற்சி முறையில் நான்கு படிகள் உள. அவை : செயலேத் தேர்ந்தெடுத்தல், திட்டமிடுதல், நிறைவேற்றுதல், மதிப்பிடுதல் என்பவை. அவைபற்றிய விவரங்களே முறை நூல்களில் கண்டு தெளிக. நிறைகள் : இம் முறையில் பல நிறைகள் உள. கற்றலில் ஆர்வம் ஏற்படுகின்றது. மாளுக்கர்களிடம் பொறுப்பையும் கடமை உணர்ச்சியையும் வளர்க்கின்றது. வாழ்க்கையில் பல நிகழ்ச்சிக&ரத் தாமாகவே சமாளிக்கும் பயிற்சியின மாளுக்கர்கள் பெறுகின்றனர். அவர்களிடம் ஒற்றுமை, விடாமுயற்சி, பிறர் கருத்துக்கு மதிப்புத் தருதல், முடிவுகட்டுதல் முதலிய கற்பண்புகள் வளர்கின்றன. படைப்பாற்றல் வளர்வதற்கு இம் முறை நல்ல வாய்ப்புகளே நல்குகின்றது. பள்ளியில் பயிற்றப்படும் எல்லாப் பாடங்களிடத்தும் ஒர் உறவை உண்டாக்குகின்றது. தனிப்பட்டோரின் மனப்பான்மைக் கேற்றவாறு கற்கும் சூழ்நிலை இங்குக் கிடைக்கின்றது. குறைகள்: இம் முறையில் சில குறைகளும் காட்டப் பெறுகின்றன. இம் முறையில் பெறும் அறிவு ஒழுங்குடன் அமைவதில்லை. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பகுதிகளே மட்டிலுந்தான் இம்முறையால் கற்க இயலும் ; அதிகச் செலவு ஏற்படும். கடைமுறையில் பள்ளிப் பாடவேளைப் பட்டியில் இம் முறையை அமைப்பது எளிதன்று. முடிவு : இம்முறை கீழ்வகுப்புகளுக்கு மிகவும் ஏற்றது. மேல் வகுப்புக்குரிய பாடங்களே ஒன்ருேடொன்று இணைப்பது சிரமம். உயர்நிலைப் பள்ளிகளில் ஆண்டின் ஒவ்வொரு பகுதியிலும் இரண்டிரண்டு தன்னுேக்க முயற்சி வேலைகளேத் தேர்ந்தெடுத்துக் குழுவாக நிறைவேற்றச் செய்யலாம். கிறை மதியினர் உள்ள வகுப்புகளில் தனித்தனியாக நிறைவேற்றும் திட்டங்களை முடிக்கத் துரண்டலாம். அ. ப. மு- 6