பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்-2 83 போக்கில், நாடகப் பாணியில், அமைந்தவை. பாஸ்டர், லிஸ்டர், ரைட் சகோதரர்கள், சர் ஐசாக் கியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், குயூசி அம்மையார் முதலியோரின் வாழ்க்கை வரலாற்றில் காணும் ஒரு சில நிகழ்ச்சிகளையும், நவீன மருத்துவ முறைகள், நோய்களேத் தடுக்கும் முறைகள், எச், ஜி, வெல்ஸ் போன்ற அறிஞர்களின் அறிவியல் கற்பனைக் கதைகள் முதலிய சிலவற்றையும் நாடக முறையில் அமைத்துத் தக்க பின்னணியுடனும் ஒத்திகை போட்டும் சிறந்த முறையில் நடித்துக் காட்டலாம். இன்றைய இளைஞர்களின் மனப்பான்மையில் நாடக முறை கவர்ச்சியுடையதாக அமையும் என்பதற்கு ஐயமில்லே. படிக்காத பாமர மக்கள் நிரம்பிய நம் நாட்டில் விளேயாட்டு முறை களாலும், நாடக முறையாலும், படக் காட்சிகள் முறையாலும்தான் அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். - முறைகளப்பற்றிய ஒரு முடிவு : மேற் கூறப்பெற்றி முறைகளில் எது சிறந்தது என்று அறுதியிட்டு எடுத்தியம்ப முடியாது. ஆசிரியரின் கோக்கம், அவரது கவர்ச்சிகள், அவர் பெற்ற பயிற்சி, மாளுக்காது அறிவு கிலே அல்லது உற்சாகம், சோதனைச்சாலைகளில் கிடைக்கும் பொருள்கள், மாணுக்கருடைய கவர்ச்சிகளைக் கூட்டான முறையில் துண்டவல்ல ஆசிரியரது ஆற்றல் ஆகிய கூறுகளுக்கேற்றவாறு ஆசிரியர் இம்முறைகளைக் கையாளுதல் வேண்டும். புதிதாகக் கற்பிக்கும் துறையில் பணியாற்றப் போகும் இளம் ஆசிரியர்களுக்குப் பயன்படட்டும் என்றும், பட்டறிவு மிக்க ஒரு சில ஆசிரியர்களும் இவற்றைத் தம் முறைகளுடன் வைத்து எண்ணட்டும் என்றும் இவை ஒரளவு விளக்கப்பெற்றன. இந்த முறைகளேப்பற்றி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்ன கருத்துகளைக் கொண்டாலும், தம் அதுபவத்திற்கேற்றவாறும் தம் கவர்ச்சிகளுக்கும் திறன்களுக்கும் ஏற்றவாறும் அவற்றுள் ஒரு சிலவற்றை மேற்கொள்ளத்தான் வேண்டும். ஒராசிரியர் வெற்றியுடன் கையாளும் முறைகள் பிறிதோராசிரியருக்குச் சிறிதும் அநுபவத்தில் சாத்தியமாக இரா. சரியான அநுபவமும் கற்பிக்கும் திறனும் அமையப் பெருத ஆசிரியர்களிடம் இவ்வுண்மையை நன்கு காணலாம். என்ருலும், வெற்றிகரமாகக் கற்பித்து வரும் பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் கற்பித் தலில் அடிப்படையான சில விதிகளே ஒப்புக்கொள்ளத்தான் செய்கின் றனர். எல்லோரும் செயல்முறையிலும் நேர் அநுபவத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள் ; அவை மிகவும் இன்றியமையாதவை என்றும் எடுத்துக் கூறுபவர்கள். மானுக்கர்கள் தத்தம் கருத்துக்களேச் சரியான மொழியில் எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெறவேண்டும் என்று விழை பவர்கள் : மாளுக்கர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் எண்ணுபவர்கள். ஆனால், அந்த ஆசிரியர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு பாடங் கற்பிக்கின்றனர். எவற்றை அவர்கள் சரியாகக்