பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


器李 - - அறிவியல் பயிற்றும் முறை கையாள்கின்றனர் என்ருே எவற்றை அவர்கள் சிறந்தவையாகக் கருதுகின்றனர் என்ருே எடுத்துரைத்தல் எளிதன்று. எனவே, சில முறைகள் மட்டிலும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு விளக்கப் பெற்றன என்பதை அறிதல் வேண்டும். முறைகளைப்பற்றிய சில குறிப்புகள் : பல்வேறு முறைகளே மேற் கொண்டு கற்பிக்கும் இளம் ஆசிரியர்களுக்குப் பயன்படும்பொருட்டு சில குறிப்புகள் ஈண்டு தரப்பெறுகின்றன: (1) எந்த முறையை மேற்கொண்டாலும் இயன்றவரை விதிவரு முறையிலேயே பாடவளர்ச்சி நடைபெறுதல் வேண்டும். மாளுக்கர்கள் அறிந்த செய்திகளே அடிப்படையாகக்கொண்டு பாடத்தைத் ெ தாடங்கி அறியாதவற்றிற்குப் படிப்படியாக அழைத்துச் செல்லுதல் வேண்டும்.' (2) கற்பிக்கும் மானுக்கர்களின் கவர்ச்சியும் உற்சாகமும் குறை யாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளல் வேண்டும். விடுப்பூக்கம் செயற் படுவதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கினால் அவை நன்முறையில் அமையும். வெறும் விதிகளையும், அளவை முறைகளையும், வழக்காறு தழுவிய முறையில் தொடங்கி மானக்கர்களின் உற்காகத்தைக் குறைத்தல் கூடாது. - - (3) எதைக் கற்பித்தாலும் அதை ஒரு பிரச்சினையாக்கிவிட்டால், மாளுக்கர் இயல்பாக அதில் நாட்டம் செலுத்துவர் : விடுப்பூக்கம் நன் முறையில் செயற்பட்டால், தாமாகக் கண்டறிவதில் மாளுக்கர் கருத் தினைச் செலுத்துவர். - (4) வகுப்பறையில் கற்பிப்பவை வாழ்க்கையில் பயன்படும் என்பதை மாளுக்கர்கள் உணருமாறு பாடம் நடைபெறுதல் வேண்டும். வெளியார் வகுத்த பாடத்திட்டத்தையும் சிறந்த முறையில் கையாள லாம். பல்வேறு துணைக்கருவிகளைக்கொண்டு கற்பிப்பவை வாழ்க்கை யில் பயன்படுவதை விளக்கலாம். (5) சிறந்த அறிவியலறிஞர்களின் வாழ்க்கையில் நேரிட்ட சில நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டிப் பாடத்தில் அக்கறையை விளை விக்கலாம். - (6) செய்து கற்றலுக்குத் தக்க வாய்ப்புகள் அளித்தல் வேண்டும். மாளுக்கர் வீடுகளில் தகரக் கொள்கலன்கள், கம்பிகள் முதலியவற்றைக் கொண்டு செய்துபார்க்கக் கூடிய சோதனைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அவற்றின் முறைகளையும் விளக்கவேண்டும்; தாமஸ் ஆல்வா எடிசன், டேவி, ஜார்ஜ் ஸ்டீவென்சன் போன்ற அறிஞர்கள், தம் வீட்டில் மேற்கொண்ட சோதனைகளால்தாம் பல மெய்ம்மைகளைக் கண்டறிந்து அழியாப் புகழ் பெற்றனர் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். மின்னற்றல் பல்வேறு சோதனைகளுக்கு வழியமைக் கின்றது என்பதையும் விளக்கலாம்.