இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்பியல்
1. அடிப்படைகள்1. இயற்பியல் என்றால் என்ன?
- பருப்பொருள் இயல்பு மற்றும் ஆற்றல் பற்றி ஆராயுந்துறை இயற்பியலாகும்.
2.இயற்பியல் என்பது ஒர் அடிப்படை அறிவியல் எவ்வாறு?
- பயன்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் கூறுவதால் அது ஒர் அடிப்படை அறிவியல்.
3.இயற்பியலின் பழைய பிரிவுகள் யாவை?
- ஒளி இயல், ஒலி இயல், வெப்பவியல், காந்தவியல், இயக்கவியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் முதலியவை ஆகும்.
4.இயற்பியலின் புதிய பிரிவுகள் யாவை?
- அணு இயற்பியல், கணிம இயற்பியல், குளிரியல், துகள் இயற்பியல், உயிர் இயற்பியல், வானவெளி இயற்பியல், சிறு பொருள் (நுண்பொருள்) அறிவியல், புதிய இயற் பியல் எனப் பல வகை.
5.இயற்பியல் ஒரு பயன்படு கணிதமாகும்? எவ்வாறு?
- இயற்பியல் சமன்பாடுகளை உருவாக்க விளக்கக் கணக்கு பயன்படுவதால், அது ஒரு பயன்படு கணிதமாகும்.
6.இயற்பியல் வழி அமையும் பயன்படு அறிவியல்கள் யாவை?
- மருத்துவம், பொறி இயல் முதலிய தொழில்நுட்பத் துறைகள்.
7.இயற்பியலில் இரு அரும்பெரும் அறிஞர்கள் யாவர்?
- நியூட்டன், ஐன்ஸ்டீன் (நோபல் பரிசு 1921).
8.இயற்பியலில் புகழ்பெற்ற நான்கு இந்திய விஞ்ஞானிகள் யாவர்?
- சர்.சி.வி. இராமன் (நோபல் பரிசு 1930), சந்திரசேகர் (நோபல் பரிசு 1983), எஸ்.என். போஸ், ஹோமி பாபா