பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111தன் இயல்பான அதிர்வெண் நிலையில் ஒரு தொகுதியின் அலைவு. இது அதிர்வியைவிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

53. பண்பேற்றம் என்றால் என்ன?

ஊர்தி அலையில் குறிபாட்டைச் சேர்த்தல். இதனால் குறிபாட்டிலுள்ள செய்தி ஊர்தியலையோடு சேர்ந்து செல்லும்.

54. பண்பிறக்கம் என்றல் என்ன?

பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் முறை.

55. தூண்டுதுலக்கி (transponder) என்றால் என்ன?

Transmitter responder என்பதின் சுருக்கம் மாற்றி அமைக்கும் கருவி. வானொலி அல்லது ரேடார் கருவி யமைப்பு குறிகளைப் பெற்றுத் தானே அவற்றிற் கேற்றவாறு குறிகளை அனுப்புவது. செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுவது.

56. மாக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கைக்கு ஆய்வுச் சான்று அளித்தவர் யார்? எப்பொழுது? எவ்வாறு?

1888இல் ஹெர்ட்ஸ் அளித்தார்.வானொலி அலைகளைப் பகுத்தும் உருவாக்கியும் ஆய்வுச் சான்றை அளித்தார்.


13. காந்தவியல்

1. காந்தவியல் என்றால் என்ன?

காந்தவிசைப் புலன்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயும் இயற்பியல் பிரிவு.

2. காந்தம் என்றால் என்ன?

இரும்பைக் கவரப் கூடிய பொருள்.

3. காந்த வகைகள் யாவை?

1. சட்ட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் குறைவு.

2. இலாட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் அதிகம்.

இரண்டும் நிலைக் காந்தம்.