இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
9. ஐன்ஸ்டீனின் சிறப்பு யாது?
- தம் மூளையையே ஆய்வுக்களமாகக் கொண்டு உய்மானத்தின் மூலம் கணித அடிப்படையில் காலத்தால் அழியாத சார்புக் கொள்கையை வகுத்தவர்.
10. அலகு என்றால் என்ன?
- ஒப்பீட்டு அளவு மதிப்பு அலகு. அதே அளவின் மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ டு. வெப்ப அலகு கலோரி.
11. அலகின் இரு வகைகள் யாவை?
- அடிப்படை அலகுகள், வழியலகுகள்.
12. அடிப்படை அலகுகள் என்றால் என்ன?
- பெரும்பான்மை அலகு முறைகளின் அடிப்படையாக அமையும் நீளம், (செ.மீ), நிறை (கிராம்), காலம் (வினாடி) ஆகியவற்றின் அலகுகள்.
13. வழியலகுகள் யாவை?
- அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப் படும் அலகு. எ- டு நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி என வரையறுக்கப்படும்.
14. துணையலகுகள் என்றால் என்ன?
- பருமனற்ற அலகுகள். அடிவழி அலகுகளுடன் வழியலகுகளை உருவாக்கப் பயன்படுபவை. எ-டு. ரேடியன்.
15. அறிவியலார் பெயர் தாங்கிய சில அலகுகள் யாவை?
- ஆம்பியர், ஒம், ஜூல், நியூட்டன்.
16. அனைத்துலக அலகுகள் என்றால் என்ன?
- அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் அனைத்துலக அலகுகள். இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி
17. எம்.கே.எஸ். முறை என்றால் என்ன?
- மீட்டர் கிலோகிராம் வினாடி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அலகு முறை. எஸ்.ஐ. அலகுக்கு அடிப்படையாக அமைந்தது.
18. பரப்பு என்றால் என்ன?