பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14047. மின்காந்த விசைக்கும் நலிவினைகளுக்கும் ஒரு தனிவகை வினையின் இயல்புகள் உள்ளன என்பதை முன்மொழிந் தவர் யார்?

1957இல் சிவிங்கர் முன்மொழிந்தார்.

48. அடிப்படை மாறிலிகள் என்றால் என்ன?

முழுதும் மாறாத சுட்டளவுகள்.

49. அடிப்படை மாறிலிகள் யாவை?

மின்னணு ஏற்றம், ஒளிவிரைவு, பிளாங் மாறிலி, ஈர்ப்பு மாறிலி.

50. ஒன்றுபடுபுலக் கொள்கை என்றால் என்ன?

மின்காந்தவினை, ஈர்ப்புவினை, வலிவினை, நலிவினை ஆகியவற்றை விளக்குங் கொள்கை. இக்கொள்கை நிறுவப்படாத ஒன்று.

51. இக்கொள்கை எப்பொழுது சரிபார்க்கப்பட்டது? எவ்வாறு?

செர்னில் (CERN) மோதல் ஆய்வுகளில் இக்கொள்கை சரிபார்க்கப்பட்டது. நான்கு வினைகளுக்கும் உரிய ஒரே கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

52. நடுவன் (மிசான் என்றால் என்ன?

நடுவணு. அடிப்படைத் துகள். மின்னணுவைவிட நிறை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டை விட இலேசானது. உட்கருவன், அணுக்கரு ஆகியவற்றிற் கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது.

53. எதிர் ஏற்றப் பொருள் என்றால் என்ன?

புவிக்கு அப்பாலுள்ள கற்பனைப் பொருள். புவியிலுள்ள பொருள் போன்றே துகள்களைக் கொண்டது. ஆனால், துகள்கள் எதிர்மின்னேற்றமுள்ளவை. காந்த முனைத் திறன் உண்டு.

54. எதிர்ஏற்றத் துகள் உள்ளது என்பதை யார் எப்பொழுது முன்மொழிந்தார்?

பால் டிரக் என்பவர் 1930இல் முன்மொழிந்தார்.

55. கரும்பொருள் என்றால் என்ன?

பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 20% உள்ளது. எரிடானஸ் விண்மீன்