பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


கூட்டத்திலுள்ளது. இதை பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ என்பவர் 1990இல் கண்டுபிடித்தார். இதை கிர்கார்ப்பு என்பவரும் 1860இல் ஆராய்ந்துள்ளார்.

56. கந்துளை என்றால் என்ன?

இடக்காலப்பகுதி. இதிலிருந்து பொருளோ ஆற்றலோ தப்ப முடியாது. இது விண்மீனாக இருக்கலாம். இங்கு விடுபடுவிரைவு ஒளியின் விரைவை விட மிகுதி. இத்துளைகள் தோற்ற மீன்களின் ஆற்றல் ஊற்றுகளாகக் கருதப்படுபவை.

57. நியூட்ரினோவுக்கு அப்பெயர் அளித்தவர் யார்?

பெர்மி, 1931.

58. நியூட்ரினோ (அல்லனோ) உள்ளது என்பதை பவுலி எப்பொழுது முன் மொழிந்தார்?

1931இல் முன்மொழிந்தார்.

59. நியூட்ரினோக்கள் எப்பொழுது முதல் தடவையாக உற்றுநோக்கப்பட்டன?

1956இல் உற்று நோக்கப்பட்டன.

60. மூவகை நியூட்ரினோக்கள் யாவை?

1. மின்னணு சார்ந்தவை. 2. மீயுயான் சார்ந்தவை. 3. டோ நியூட்ரினோ.

61. இவற்றைக் கண்டறிந்தது யார்?

ஜி டேன்பி தலைமையில் அமைந்த குழு நியூயார்க்கில் புரூக்கவென் என்னுமிடத்தில் 1962இல் கண்டறிந்தது.

62. அணு அளவைத் தோராயமாகக் கண்டறிந்தவர் யார்?

பெரின், 1908 - 1909,

63. டேக்கியான்கள் இருப்பதை முன்மொழிந்தது யார்?

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஈ.சி.ஜி. சுதர்சன், கேரளா.

64. இத்துகள்களின் பண்பு யாது?

ஒளியை விட விரைவாகச் செல்பவை.

65. இவர் தொடர்பு கொண்ட உலகப்புகழ்பெற்ற அறிவியலார் யாவர்?

டிராக், பவுலி, எம்.ஜி.மேயர்.