இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
- நீர்மம் அல்லது கெட்டிப்பொருள் வளியை உறிஞ்சும் முறை.
40. உட்கவர்மானி என்றால் என்ன?
- வளிக் கரைதிறனை நீர்மங்களில் உறுதி செய்யும் கருவி.
41. வெளிக்கவரல் என்றால் என்ன?
- ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின் அணு அல்லது மூலக்கூறு படியும் முறை. பரப்பூன்றல் என்றும் கூறலாம்.
42. வெளிக்கவரி என்றால் என்ன?
- வெளிக்கவரலை நிகழ்த்தும் பொருள்.
43. பாகியல் எண் என்றால் என்ன?
- இயங்கு நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின் மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டுவிசை அந்நீர்மத்தின் பாகியல் எண் ஆகும்.
44. பாகுநிலைமானி என்றால் என்ன?
- பாகுநிலையை அளக்கப் பயன்படும் கருவி.
45. அடர்த்தி என்றால் என்ன?
- ஒரு கன செண்டிமீட்டர் பொருளின் நிறை. அலகுண்டு. பாதரசத்தின் அடர்த்தி 13.6 கி/க.செ.மீ
46. ஒப்படர்த்தி அல்லது அடர்த்தி எண் என்றால் என்ன?
- ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள வீதம். அலகில்லை ஒரு எண். பாதரசத்தின் அடர்த்தி எண் 13.6.
47. ஒப்படர்த்திக்கு நீர் ஏன் ஒப்பீட்டுப் பொருளாகக் கொள்ளப் பட்டுள்ளது?
- நீரின் அடர்த்தி எண் 1 அல்லது ஒரு கன செண்டி மீட்டர். நீரின் எடை ஒரு கிராம். எளிதில் கிடைப்பது.
48. ஒர் இரும்புத் துண்டு நீரில் அமிழ்கிறது. பாதரசத்தில் மிதக்கிறது. ஏன்?
- இரும்புத்துண்டின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம். நீரில் மூழ்குகிறது. அது பாதரசத்தை விட அடர்த்தி குறைவாக இருப்பதால் அதில் மிதக்கிறது.
49. வளி என்றால் என்ன?
கி.2