இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
- திட்டமான எல்லைகளோ பருமனோ இல்லாத காற்று போன்ற பொருள். எ-டு ஆக்சிஜன், அய்டிரஜன்.
50. கே லூசக் விதி யாது?
- வளிகள் வினைப்படும் பொழுது, அவற்றின் பருமனும் வினையால் விளைந்த வளிப் பருமனும் ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் சிறிய முழுஎண் வீதத்தில் இருக்கும் (1804).
51. கிரகாம் விதி யாது?
- வளியின் பரவு நேர் விரைவு, அதன் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்குத் தலைகீழ் வீதத்தில் உள்ளது. (1829)
52. இவ்விதியின் பயன் யாது?
- விரவல் முறையில் ஓரிமத் தனிமங்களைப் பிரிக்கப் பயன்படுகிறது.
53. விரவல் என்றால் என்ன?
- அணுத் துகள்கள் வெப்ப இயக்கத்தால் தம்மிடத்தை விட்டு நகர்தல். அணுக்கள் என்பவை வளி, நீர்மம், திண்மம் ஆகியவற்றைக் குறிக்கும்.
54. விரவலுக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.
- நீரில் ஒரு துளி மை மெதுவாகப் பரவுதல்.
55. விரவல் எக்கி என்றால் என்ன?
- அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி.
56. வளி விதிகள் யாவை?
- 1. பாயில் விதி : நிலையான வெப்பநிலையில் ஒரு மாதிரியின் அழுத்தம் (P) அதன் பருமனுக்கு (V) எதிர்வீதத்தில் இருக்கும். PV = மாறிலி.
2. சார்லஸ் விதி : நிலையான அழுதத்தில் வெப்ப இயக்க வெப்பநிலைக்குப் (T) பருமன் (V) நேர்வீதத்தில் இருக்கும். V/T = மாறிலி.
3.அழுத்த விதி : நிலையான பருமனிலுள்ள ஒரு மாதிரியின் வெப்ப இயக்க வெப்பநிலைக்கு, அழுத்தம் நேர் வீதத்திலிருக்கும்.
இம்மூன்று விதிகளையும் அனைத்துச் சமன்பாட்டில் ஒன்றாக இணைக்கலாம்.
- 1. பாயில் விதி : நிலையான வெப்பநிலையில் ஒரு மாதிரியின் அழுத்தம் (P) அதன் பருமனுக்கு (V) எதிர்வீதத்தில் இருக்கும். PV = மாறிலி.