உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


 21. நெம்பு கோலின் நெறிமுறை என்ன?

பளு X பளுக்கை = திறன் x திறன்கை.

22. நெம்புகோலின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறுக.

முதல் வகை நெம்புகோல் - ஏற்றம், கத்தரிக்கோல், நீர் உருளை. எ.இ.1. இரண்டாம் வகை - பாக்கு வெட்டி, கதவு, இயங்குகப்பி, எ.இ. 1க்கு மேல். மூன்றாம் வகை - இடுக்கி, மீன்தூண்டில். எ.இ.1க்குக் குறைவு.

23. நெம்பு கோலின் எந்திர இலாப வாய்பாடு என்ன?

எ.இ. = பளு/திறன் = திறன்கை/பளுக்கை

24. கப்பி என்றால் என்ன?

ஓர் அச்சில் தங்குதடையின்றிச் சுழலக்கூடிய ஒர் உருளை.

25. கப்பியின் வகைகள் யாவை?

1. நிலைக் கப்பி கிணற்றில் நீர் இழுக்கும் உருளை. எ.இ.1.
2. இயங்கு கப்பி எ.இ. 2.

26. கப்பித் தொகுதி என்றால் என்ன?

கப்பிகள் பல சேர்ந்தது.

27. கப்பித் தொகுதியின் வகை யாது?

1. நிலைக்கப்பித் தொகுதி.
2. இயங்குகப்பித் தொகுதி.

28. கப்பியும் பட்டையும் என்றால் என்ன?

ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்குத் திருப்பு விசையினைச் செலுத்தும் எந்திர ஏற்பாடு.

29. சாய்தளம் என்றால் என்ன?

இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம்.
எந்திர இலாபம் = எடை/திறன் = நீளம்/உயரம்

30. சாய்தளம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுகிறது?

பளுவை வண்டியில் ஏற்ற இறக்கப் பயன்படுதல். படிக்கட்டுகள், திருகுகள், ஆப்பு ஆகியவை சாய்தளத்தின் அடிப்படையில் அமைந்தவை.

31. ஆப்பின் சிறப்பென்ன?