உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி.

35. பனிநிலை ஈரநிலைமானி என்றால் என்ன?

பனிநிலையை உறுதி செய்யுங் கருவி.

36. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

இதில் ஆவி குளிர்ச்சி செய்யப்படும் பொழுது, அது எவ்வெப்ப நிலையில் சுருங்குகிறதோ அவ்வெப்ப நிலையை அளந்து இதை உறுதி செய்யலாம்.

37. ஈரநிலை என்றால் என்ன?

ஈரப்பதம். காற்றுவெளியில் நீராவியின் செறிவு இது.

38. இதன் வகைகள் யாவை?

1. தனி ஈரநிலை, 2. ஒப்புஈரநிலை.

39. தனி ஈரநிலை என்றால் என்ன?

ஓரலகு காற்றுப் பருமனிலுள்ள நீராவியின் நிறை.

40. ஒப்பு ஈரநிலை என்றால் என்ன?

காற்றிலுள்ள ஈரத்திற்கும், ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் காற்று நிறைவுறுமானால் அதில் அப்பொழுதுள்ள ஈரத்திற்குமுள்ள வீதம். இது விழுக்காடாகத் தெரிவிக்கப்படும்.

41. ஈரமாக்கி என்றால் என்ன?

காற்றுக்கு ஈரத்தை அளித்துத் தேவையான ஈர நிலைமைகளை நிலைநிறுத்துங்கருவி.

42. மூடுபனி என்றால் என்ன?

இதை மஞ்சு எனலாம். புழுதித்துகள்களில் நீர்த்துளிகள் சுருங்குவதால் உண்டாவது.

43. உறைபனி என்றால் என்ன?

உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவ தால் உண்டாகும் பனிக்கட்டியுறை.

44. உறைபனிக்கட்டு என்றால் என்ன?

மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி முதலியவை. பனிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்படுவது.