உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஒரு தொகுதியின் பண்பும் அதன் வேலை செய்யும் கொள்திறனும் ஆகும். அலகு ஜூல்.

18. ஆற்றலின் இருவகைகள் யாவை?

இயக்க ஆற்றல், நிலையாற்றல்.

19. நிலையாற்றல் என்றால் என்ன?

தன் நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு பொருளில் தேங்கி இருக்கும ஆற்றல், எ-டு. தொட்டிநீர், நீர்த்தேக்கம்.

20. இயக்க ஆற்றல் என்றால் என்ன?

இயக்கத்தைத் தரும் ஆற்றல், எ-டு. அருவி.

21. ஆற்றல் வடிவங்கள் யாவை?

வேதியாற்றல், வெப்பஆற்றல், மின்னாற்றல், காந்தஆற்றல்.

22. ஆற்றலின் சிறப்பு யாது?

ஓர் ஆற்றல் மற்றோர்ஆற்றலாக மாறவல்லது. எ-டு. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக அல்லது எந்திர ஆற்றலாக மாறவல்லது; அழியாதது.

23. ஆற்றல் மாறா விதி என்றால் என்ன?

ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது. ஒரு வகை ஆற்றல் மறைவின்றிச் சிதறுமாயின், பிறிதொரு வகையில் அது வெளித் தோன்றும். இவ்விதியை 1748இல் மிக்கல் லோமனசவ் வகுத்தார்.

24. உந்தம் என்றால் என்ன?

ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம். P = mxV. P- உந்தம், m- நிறை. v- நேர் விரைவு.

25. உந்தம் மாறாக் கொள்கை என்றால் என்ன?

இரு பொருள்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதும் பொழுது, மோதலுக்குப் பின் மொத்த உந்தமானது மோதலுக்கு முன்னிருந்த மொத்த உந்ததத்திற்குச் சமம்.

26. வட்ட இயக்கம் என்றால் என்ன?

வளைவழி ஒன்றில் செல்லும் துகளின் இயக்கம். மைய நோக்குவிசை, மைய விலக்குவிசை இவ்வியக்கம் சார்ந்தவை.