பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

27. மையநோக்கு விசை என்றால் என்ன?

வட்டப்பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. இது வட்ட இயக்கம் சார்ந்தது.

28. இவ்விசைக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.

கயிற்றில் கட்டப்பட்ட கல். சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மையநோக்குவிசை,

29. மைய விலக்கு விசை என்றால் என்ன?

மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும்.

30. மைய விலக்கு விசையைத் தகுந்த எடுத்துக்காட்டால் விளக்குக.

கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தைவிட்டு வெளியே இழுக்கும் விசை. வட்ட இயக்கம் சார்ந்தது.

31. மைய விலக்கு விசையின் அடிப்படையில் அமைந்த கருவிகள் யாவை?

மைய விலக்குச் சுழல் கருவி; வாட்டின் ஆளி(கவர்னர்).

32. மையவிலக்கி என்றால் என்ன?

சுழற்சியால் ஒரு தொங்கலிலுள்ள பகுதிகளைப் பிரிக்கப் பயன்படும் கருவி. தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல்.

33. நிலைமம் என்றால் என்ன?

நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு.

34. நிலைமத்தின் சிறப்பென்ன?

புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப் பண்பால் தானாகவே ஒரு பொருள் இயக்க மாற்றத்தைத் தடை செய்யும்.

35. நிலைமத்திருப்புத்திறன் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலை விலுள்ள m என்னும் நிறையுடைய துகள் அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின்