பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அத்துகளின் நிறை, நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகியவற்றின் பெருக்கற்பலன் (mr²) நிலைமத் திருப்பு திறனாகும். இது ஒரு மாறிலி. அலகு மெட்ரிக் முறையில் கிராம் செமீ².

36. விசை இயக்கக் கொள்கை என்றால் என்ன?

பருப்பொருளின் இயற்பண்புகளை அதன் பகுதித் துகள்களின் இயக்கங்களைக் கொண்டு விளக்குவது. கவுண்டம்போர்டு, ஜேம்ஸ் ஜூல், ஜேம்ஸ் கிளார்க் ஆகிய மூவரும் சேர்ந்து உருவாக்கியது.

37. லிசாஜஸ் உருவங்கள் என்றால் என்ன?

ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச்சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும்பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைவதால் கிடைக்கும் உருவங்கள். இவை தனிச்சீரிசை இயக்கங்களின் 1. வீச்சு, 2. அதிர்வெண், 3. வீதம் ஆகியவற்றைப் பொறுத்தது.

38. எந்திரவியல் என்றால் என்ன?

விசைப்பொறி இயல். பொறிகளின் எந்திர நுட்பத்தை ஆராயுந்துறை.

39. எந்திரம் என்றால் என்ன?

பொதுவாக, அளவில் பெரிதாகவும் ஒருவகை ஆற்றலை எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியமைப்பு. எ-டு. வெப்ப எந்திரம். இதன் ஆற்றல் குதிரைத் திறனில் இருக்கும்.

40. விசைமிதிவண்டி என்றால் என்ன?

பளுக்குறை உந்துவண்டி (மொபெட்).

41. குதிகுடை என்றால் என்ன?

விண்குடை. குடை போன்ற அமைப்பு. வான வூர்தியிலிருந்து இறங்கவும் வானவெளிக்கலம் காற்று வழியாக மீளும்பொழுது தரையை அடையவும் பயன்படுவது.

42. எதிர்முடுக்கம் என்றால் என்ன?

இயங்குகின்ற பொருள் தடை ஏற்படும்பொழுது விரைவுத்தளர்ச்சி அடைகிறது. புவியிலிருந்து