பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஒரு கொள்கலத்திலுள்ள வளியழுத்தத்தை குறைக்கப் பயன்படும் குழாய்.

70. திறப்பி (வால்வு என்றால் என்ன?

ஓர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் அமைப்பு. எ-டு. கனற்சி எந்திரத்தில் உள்விடு, வெளிவிடு திறப்பிகள்.

71. திசைச்சாரி என்றால் என்ன?

திசை இன்றியமையாததாக உள்ள அளவு. இடப்பெயர்ச்சி திசைச்சாரி அளவாகும்.

72. திசைச்சாரி வேறுபாடு என்றால் என்ன?

இரு திசைச்சாரிகளைக் கழிக்க வரும் பலன்.

73. திசைச்சாரி அளவு என்றால் என்ன?

இயற்பியல் அளவு. இதில் அளவும் திசையும் குறிக்கப்பட வேண்டும். விசை, நேர்விரைவு முதலியவை திசைச்சாரி அளவுகளாகும்.

74. நேர்விரைவு வீதம் என்றால் என்ன?

ஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் தொலைவிதம் என்றும் கூறலாம்.

75. அதிர்வு என்றால் என்ன?

நடுநிலையில் ஒழுங்காகத் திரும்பத் திரும்ப நடைபெறும் முன்பின் இயக்கம்.

76. வீழ்பொருள் என்றால் என்ன?

எரியப்படும் பொருள். எ-டு. குண்டு.

77. வீழ்பொருளியல் என்றால் என்ன?

எரிபொருள்களின் இயக்கத்தை ஆராயுந் துறை.

78. டாப்ளர் விளைவு என்றால் என்ன?

அலைநீளத்தோற்ற மாற்றத்தால் ஏற்படுவது. உற்றுநோக்குபவர், கதிர்வீச்சு மூலச்சார்பு இயக்கம் இதற்குக் காரணம். நம்மை நோக்கியோ விலகியோ புகைவண்டி செல்வதாகக் கொள்வோம். இது ஒலி அதிர்வெண்ணால் ஏற்படும் மாற்றம். இதனால் நாம் அமர்ந்திருக்கும் வண்டி ஒடிக்கொண்டிருக்கும்பொழுது,