பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

எதிர்பக்கத்திலிருந்து வரும் வண்டியின் ஒலி அதிர் வியைவு அதைவிடப் பெரிய அளவில் உயர்ந்தும் வண்டி கடந்தபின் அவ்வியைவு இறங்கியும் காணப்படும். ஆனால், நாம் செல்லும் வண்டியில் அவ்வாறு இயைபு மாற்றமோ இறக்கமோ இரா. ரேடாரில் இவ்விளைவு பயன்படுவது. இதை 1842இல் இவர் கண்டுபிடித்தார்.



6. வெப்பவியல்


1. வெப்பம் என்றால் என்ன?

பொருளின் ஆற்றல். வெப்பநிலை வேறுபாட்டால் மாறுவது. இயக்க நிலையில் உள்ளது. அலகு கலோரி அல்லது ஜூல்.

2. வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன?

ஒரு பொருள் முழுவதையும் 1" செக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு. T = ms. கலோரிகள். T - வெப்ப ஏற்புத்திறன். m - நிறை. S. வெப்ப எண்.

3. வெப்பமாற்றி என்றால் என்ன?

பாய்மங்கள் ஒன்றோடு மற்றொன்று கலவாமல் அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்துங் கருவி.

4. வெப்ப ஓட்டம் என்றால் என்ன?

ஒரலகு நேரத்தில் ஓரலகு பரப்பில் இடமாற்றம் பெறும் வெப்பம்.

5. வெளிக்கவரல் வெப்பம் என்றால் என்ன?

நிலையான அழுத்தத்தில் ஒரு மோல் அளவுள்ள பொருள் மற்றொன்றின்மீது வெளிக்கவரப்படும் வெப்பம். உள்ளிட்டு வெப்பத்தால் உயர்வது.

6. அணுவாதல் வெப்பம் என்றால் என்ன?

ஒரு மோல் அளவுள்ள பொருளை அணுக்களாகச் சிதைக்கத் தேவையான வெப்பம்.

7. கனற்சி வெப்பம் என்றால் என்ன?

மிகு உயர்வளியில் ஒரு மோல் அளவுள்ள பொருளை எரிக்க உண்டாகும் வெப்ப அளவு நடைமுறை அலகு வாட்.