உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

 29. வெப்பநிலைமானி என்றால் என்ன?

வெப்பநிலையை அளக்கப் பயன்படுங் கருவி.

30. வெப்பநிலைமானியின் வகைகள் யாவை?

செல்சியஸ் வெப்பநிலைமானி, பாரன்ஹைட் வெப்பநிலைமானி, மருத்துவ வெப்பநிலைமானி.

31. வெப்பநிலைமானி நீர்மம் பொதுவாக யாது?

பாதரசம்.

32. வெப்பநிலை எண் என்றால் என்ன?

இது ஒரு மாறா எண். ஒர் இயற்பியல் பண்பு.

33. வெப்பநிலை அளவுகோல் என்பது என்ன?

வெப்பநிலையை அளக்கும் செய்முறையளவு. நிலையான வெப்பநிலைகளால் உறுதி செய்யப்படுவது.

34. மேல்திட்ட வரை என்றால் என்ன?

செஇல் நீரின் கொதிநிலை 100".

35. கீழ்த்திட்ட வரை என்றால் என்ன?

செஇல் பனிக்கட்டி உருகுநிலை 0" அல்லது நீரின் உறைநிலை.

36. உறைகலவை என்றால் என்ன?

பனிக்கட்டியும் உப்பும் சேர்ந்தது.

37. இக்கலவையின் பயன் யாது?

பொருள்களைக் குளிர்விக்கப் பயன்படுவது.

38. உறைநிலை என்றால் என்ன?

திட்ட அழுத்தத்தில் ஒரு நீர்மம் தன் திண்ம நிலையில் சமநிலையிலுள்ள வெப்பநிலை. இதற்குக் கீழ் அது உறைகிறது அல்லது கெட்டியாகிறது.

39. உலர்ந்த பனிக்கட்டி என்றால் என்ன?

- 80 செ.இல் உள்ள திண்மக் கரி ஈராக்சைடு, வண்டிகளில் செல்லும் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுகிறது.

40. நீராவி என்றால் என்ன?

நீர் 100 செ.இல் கொதித்து ஆவியாவதால் உண்டாவது. இதற்கு இயக்கும் ஆற்றல் உண்டு.