பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

 41. நீராவியின் வகைகள் யாவை?

1. ஈர ஆவி, 2. உலர் ஆவி. 3. மீஉலர் ஆவி. 4. குறிக்கோள் ஆவி.

42. மீஉலர் ஆவி என்றால் என்ன?

வளி விதிக்கு உட்பட்ட ஆவி.

43. குறிக்கோள் வளி என்றால் என்ன?

முடிவற்ற சில மூலக்கூறுகள் அடங்கிய வளி. இக்கூறுகள் ஒன்றின்மீது மற்றொன்று விசையைச் செலுத்தா.

44. நீராவி எந்திரம் என்றால் என்ன?

நீராவியால் இயங்குவது. இதில் வெப்ப ஆற்றல் எந்திர ஆற்றலாக மாறுகிறது.

45. முதல் நடைமுறை நீராவி இயந்திரத்தை அமைத்தவர் யார்?

ஜேம்ஸ் வாட், 1769

46. பற்றல் என்றால் என்ன?

வினைபடுபொருள்களின் வெப்பநிலையை உயர்த்திக் கனற்சியை உண்டாக்கல். இது உண்டாக்கும் வெப்பநிலை பற்று வெப்பநிலையாகும். வெப்ப எந்திரத்தில் நடைபெறுவது.

47. நீராவியாதல் நன்கு நடைபெறுவதற்கு வேண்டிய நிபந்தனைகள் யாவை?

ஆவியாகும் பரப்பு அதிகமிருத்தல், காற்றில் ஈரநிலை குறைந்திருத்தல், ஆவியாகும் நீர்மத்தின் கொதிநிலையைவிட வெப்பநிலை குறைவாக இருத்தல்.

48. கோடைக்காலம், மழைக்காலம் இவ்விரண்டில் எப்பொழுது ஆவியாதல் அதிகமிருக்கும்?

கோடைக்காலத்தில்.

49. ஆவியாதலின் பயன்கள் யாவை?

ஒரு நீர்மக் கலவையை அதன் பகுதிகளாகப் பிரிக்க முடிகிறது. மழை பெய்யக் காரணமாக உள்ளது.

50. கொதித்தல் என்றால் என்ன?

வெப்பநிலை மாறாமல் ஒரு நீர்மம் ஆவி அல்லது வளிநிலைக்கு மாறுதல்.