உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

E=mc2. E=ஆற்றல், m = நிறை, c = ஒளி விரைவு.

2. பொதுக் கொள்கை : 1915இல் உருவாக்கப்பட்டது. இதில் முடுக்கப் பெற்ற தொகுதிகளைச் சேர்ந்ததனால் ஈர்ப்பாற்றலை அவர் பகுத்தறிய முடிந்தது. அவர் விண்ணகத்தை நாற் பருமக் கால இடத் தொடர்ச்சியாகக் கருதுகிறார்.

12. ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையின் சிறப்பென்ன?

1. நியூட்டன் விசை இயல் திரிபுகளை விளக்குவது.

2. நியூட்டன் விசை இயல்படி புதன் என்னும் கோளின் இயக்கம் முரண்பட்டது. ஆனால், இதை ஐன்ஸ்டின் சார்புக் கொள்கை தெளிவாக விளக்குகிறது. கதிரவன் அருகே செல்லும் ஒளிக்கதிர்கள் அதன் ஈர்ப்புப் புலத்தால் வளைகின்றன என்பது ஆய்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. எவ்வகை ஆய்வுமின்றித் தம் உய்த்துணர்வினால் மட்டுமே இக்கொள்கையை உருவாக்கியது தனிச் சிறப்பு.

4. காலத்தால் அழியாக் கொள்கை. அறிவியல் வரலாற்றில் ஒர் எல்லைக் கல். இதுவரை இதற்கு ஒரு முடிவான திருத்தம் எதுவும் கூறப்படவில்லை.

13. ஐன்ஸ்டீன் விண்ணகம் என்றால் என்ன?

ஐன்ஸ்டீன் விண்ணக மாதிரி. இது நாற்பருமன் கொண்ட உருளை வடிவப்பரப்பு. இப்பரப்பு ஐப்பருமனுடைய வெளியில் உள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் கண்ட விண்ணகம்.

14. ஏ-5 என்றால் என்ன?

இது ஒர் குறிப்புச் சவடி. ஐன்ஸ்டீன் பயன்படுத்தியது. இது 84 பக்கங்கள் கொண்டது. சிக்கலான கணித வாய்பாடுகள் இருந்தன. இவை எல்லாம் ஐன்ஸ்டீன் கையாலேயே எழுதப்பட்டவை.

15. ஐன்ஸ்டீன் தம் கொள்கைக்கு எங்கு, எப்பொழுது முதல் விளக்கமளித்தார்?

1915 நவம்பர் பெர்லின் அறிவியல் கழகத்தில் ஓர் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார். இதுவே இவர் தம்