பக்கம்:அறிவியல் வினா விடை-இயற்பியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84




பெரிதாகக் கேட்கும். நடுவில் இருப்பவர்கள் ஒன்றுங் கேட்க இயலாது. முகட்டின் ஒரு பகுதி பிரதிபலிக்கும் பரப்பாகிறது. ஒலி அலைகள் முக்கியக் குவியங்களில் ஒன்று சேர்வதால், இத்தகைய கட்டிடங்கள் தாழ்குரல் பெருக்குகூடங்கள் எனப் பெயர் பெறும்.

42. இம்மாடங்கள் உள்ள இடங்கள் யாவை?

தூய பால் ஆலயம், இலண்டன். கோல்கும்பஸ், இந்தியா.

43. குறை ஒலிபெருக்கி என்றால் என்ன?

கேள் அதிர்வெண் கொண்ட ஒலிகளை உண்டாக்குங் கருவி.

44. விம்மல்கள் என்றால் என்ன?

ஒலியலைகள் அல்லது மற்ற அலைகளின் செறிவில் ஒழுங்காக ஏற்படும் ஏற்ற இறக்கம்.

45. ஒலித்தடை என்றால் என்ன?

இது மாக் 1 என்னும் அளவில் ஏற்படுவது. கெட்டியான சுவர் போன்றது என்று கருதப்படுவது. மீஒலி விரைவில் செல்லும் வானஊர்தியின் கட்டுப்பாட்டைக் குலைப்பது. இதைத் தவிர்க்க ஊர்திகள் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்படும்.

46. ஒலிமுழக்கம் என்றால் என்ன?

பீச்சு ஊர்தியால் ஏற்படுவது. இது ஒரு பலத்த வெடிப்போசை வீடுகளை அதிரச் செய்வது. ஜன்னல்களை உடைப்பது. இது காற்றின் அதிர்ச்சி அலையே. இது கேட்பதற்கு அச்சம் தரும். ஆனால் அழிவை உண்டாக்குவது அல்ல.

47. மீஒலி விரைவு என்றால் என்ன?

இயல்பான ஒலிவிரைவுக்கு மேல் உள்ள விரைவு. இது மாக் 1 க்கு மேலுள்ளது.

48. மாக் எண் என்றால் என்ன?

ஒரு பறக்கும் பொருளின் (வானஉஊர்தி) விரைவுக்கும் ஒரே உயரம் வெப்பநிலை ஆகிய நிலைமைகளில் ஒலியின் விரைவுக்குமுள்ள வீதம். இதைக் கண்டறிந்தவர் ஆஸ்திரி நாட்டு இயற்பியல் அறிஞரான டாக்டர் எர்னெஸ்ட்